தேர்தல் பணியாளர்களுக்கு நோட்டீஸ் கைக்குழந்தையுடன் காலில் அடிபட்டு காயத்துடன் ஒன்றாக கூடியதால் பரபரப்பு
தேர்தல் பணியில் முதல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத 379 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கைக்குழந்தையுடனும் உடல் நிலை முடியாத வயதானவர்களும் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கட்டிடத்தில் கூடினார்கள்.
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 15 ஆயிரத்து 800 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர் இவர்களில் முதல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாமல் இருந்த 369 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக திருச்சி மாவட்ட 9 சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற இருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் நிறைவடைந்தது அப்போது 369 பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தால் இதனை அடுத்து அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இன்று அவர்கள் திருச்சி பழைய மாவட்ட ஆட்சியராக வளாகத்தில் அனைவரும் வந்து உரிய விளக்கங்களை அளித்துள்ளனர். கைக்குழந்தையுடன் கூட அரசுப் பணியில் இருப்பவர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ சான்றிதழ் கொடுத்தால் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது விளக்கம் அளிக்காதவர்கள் இரண்டாவது பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும் இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அங்கு வந்த அரசு ஊழியர்கள் முக்கியமாக பலர் உடல்நிலை பாதிக்கப்பட்வர்களும், வயதானவர்களும் ,கைக்குழந்தையுடன் காலில் காயம் பட்டு கட்டுடனும் வந்திருந்தனர் . தங்களால் தேர்தல் பணியில் ஈடுபட முடியாது என்பதற்காக விளக்கம் கொடுப்பதற்கு வந்தனர். ஆனால் ஒரு சிலர் தங்களை அலைகழிப்பதாகவும் புகார் தெரிவித்தனர்.
உடனடியாக மாவட்ட தேர்தல் அதிகாரி இதில் தலையிட்டு தங்களுக்கு உதவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். அது மட்டுமில்லாமல் ஒரு சில பள்ளிகளில் ஒரு சில ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டது. பாகுபாட்டுடன் ஒரு சிலரை அழைக்காமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU