திருச்சி வங்கியில் 1.85 கோடி மோசடி -ஆக்ஸிஸ் வங்கி சோழமண்டல பைனாஸ் நிறுவனம் மீது போலீசில் புகார்

திருச்சி வங்கியில் 1.85 கோடி மோசடி -ஆக்ஸிஸ் வங்கி சோழமண்டல பைனாஸ் நிறுவனம் மீது போலீசில் புகார்

திருச்சி ஸ்ரீரங்கம் வசந்த் நகரை சேர்ந்த ராஜாமுகமது, அவரின் மனைவி நூர்ஜஹான் ஆகியோர் தில்லைநகரிலுள்ள சோழமண்டலம் பைனான்ஸ் நிறுவனத்தில், தஞ்சாவூரில் உள்ள சொத்துக்களை அடமானம் வைத்து 1 கோடியே 85 லட்சத்து 87 ஆயிரத்து 542 ரூபாய் கடன் பெற்றிருந்தனர். கடனை கட்ட முடியாத சூழலில் தில்லைநகரில் உள்ள ஆக்சிஸ் பேங்கிற்கு சென்று சோழ மண்டல பைனான்சில் அடமானமாக வைக்கப்பட்ட  சொத்துக்களை மீட்டு,  ஆக்ஸிஸ் வங்கியில் அடமானம் வைக்க கேட்டு உள்ளனர்.

இதன் காரணமாக  சோழமண்டலம் பைனான்ஸ்க்கு  1 கோடியே 44 லட்சத்து 86 ஆயிரத்து 618 ரூபாய்க்கு ஆக்ஸிஸ் பேங்க் மூலம் DD வழங்கப்பட்டுள்ளது. மேலும் 41 லட்சம் ரூபாய்க்கு  ராஜாமுகமது செக்  வழங்கியுள்ளார். ஆனால் அந்த செக் பணமில்லை என,  பவுன்ஸ் ஆகி விட்டது. இதனைத்தொடர்ந்து ஆக்சிஸ் பேங்க் கொடுத்த பணத்திற்கு சொத்துக்கான  ஆவணங்களை வங்கியில் ஒப்படைக்க கூறப்பட்டு உள்ளது.

ஆனால் சோழமண்டல பைனான்சில் மீதம் கட்ட வேண்டிய (செக் பவுண்ஸ் ஆன தொகை ) 41 லட்சத்திற்கான தொகையை கட்டினால்தான் சொத்துக்கான ஆவணங்களை தருவோம் என்று கூறிவிட்டனர்.

இதன் காரணமாக  ஆக்சிஸ் வங்கி தில்லைநகர் கிளை உதவி மேனேஜர் மணிகண்டன் இதுகுறித்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் ராஜாமுகமது, நூர்ஜஹான், சோழமண்டலம் பைனான்ஸ் தில்லைநகர் கிளை மேலாளர் ஆகியோர் மீது வழக்கு பதிந்து உள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm