தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்ட திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
தொட்டியம், ஶ்ரீ மதுரை காளியம்மன் கோவில் திருவிழா வருவதையொட்டி மக்களின் பாதுகாப்பு நலன் கருதி கோவில் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பார்வையிட்ட திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திருச்சி மாவட்டம், தொட்டியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீ மதுரகாளியம்மன் கோவில் திருவிழா 29.03.2022 முதல் 06.04.2022 வரை நடைபெற உள்ளது.
அதனடிப்படையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சுஜித்குமார் இ.கா.ப அவர்கள் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோவிலுக்கு வரும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள ஆய்வு செய்தார்.
உடன் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பால்வண்ணநாதன் அவர்கள் மற்றும் முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் அருள்மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய...