திருச்சியில் உள்ள நகைக் கடைகளில் சிஆர்பிஎப் வீரர்களுடன் அமலாக்கத்துறை திடீர் சோதனை
திருச்சி சின்னக் கடை வீதி ,பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகை கடைகளில் அமலாக்கத் துறையினர் சோதனை. ஐந்து கார்களில் 10த்திற்க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக நள்ளிரவு முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பத்திற்கு மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்களை வைத்து இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர்கள் சிறு கடைகளை வைத்துக்கொண்டு வேறு எதுவும் தொழிலில் முதலீடு செய்து உள்ளார்களா? இவர்களுடைய முக்கிய பிரதான தொழில் வேறொன்று உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்ங்களில் மணல் குவாரிகளில் அமலாக்க துறை சோதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று சென்னையில் அந்த முதன்மை நீர் வளத்துறை பொறியாளரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர்.
இதுமட்டுமின்றி சென்னையில் உள்ள பிரபல நகை கடைகளில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். இதனை தொடர்ந்து திருச்சியில் சிறிய நகை கடைகளின் மூலம் வேறு தொழிலில் முதலீடு செய்து வருகிறார்களா? அல்லது மணல் குவாரியுடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? அதன் அடிப்படையில் தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் திருச்சி சின்ன மற்றும் பெரிய கடை வீதிகளில் அதிக அளவு நகை கடைகள் செயல்பட்டு வருகிறது. தற்பொழுது அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையால் அப்பகுதியில் உள்ள மற்ற நகைக்கடை உரிமையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.