வாடகைக்கு ரூம் புக் செய்து ஏமாற வேண்டாம் - திருச்சி மாநகர காவல் ஆணையர் தகவல்

வாடகைக்கு ரூம் புக் செய்து ஏமாற வேண்டாம் - திருச்சி மாநகர காவல் ஆணையர் தகவல்

திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும்‘ வகையில், சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், போலி இணையதளம் மூலம் ஆன்லைனில் ரூம் புக் செய்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும், சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காவல் துணை ஆணையர்கள், சரக உதவி ஆணையர்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

காவல் ஆய்வாளர்களுக்கு உரிய வெளியூர்களிலிருந்து வரும் தொழிலதிபர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கும் ஹோட்டல் மற்றும் லாட்ஜ் ஆகியவற்றில் போலியான இணையதளம் மூலம் ஆன்லைனில் ரூம் புக் செய்து தருவதாக கூறி சமூகவலைதளத்தில் வரும் விளம்பரங்களை நம்பி பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு ரூம் புக் செய்து தராமல் ஏமாற்றுவதாக போலியான இணையதளம் மீது புகார்கள் சமீபகாலமாக பதிவாகி வருகின்றது.

மேலும் இதுபோன்று போலி இணையதளம் மூலம் ரூம் புக் செய்து தருவதாக வரும் போலி விளம்பரங்களை நம்பி, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் பணம் அனுப்பி ஏமாற வேண்டாம் எனவும், இதுபோன்று மோசடியில் ஈடுபடும் நபர்கள் பற்றிய தகவல்களை காவல்துறைக்கு தெரிவிக்கும்படியும், விபரம் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision