திருச்சி வாகன ஓட்டிகள் மீது விழும் நிலையில் உள்ள பிளக்ஸ் போர்டு நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி
திருச்சி மாநகர் பகுதியில் ஆங்காங்கே பிளக்ஸ் போர்டுகள் சாலை ஓரங்களிலும் சுவர்களின் மேலேயும் வைக்கப்பட்டுள்ளது. இவை முறையாக அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ளனவா, பாதுகாப்பான முறையில் யார் மீதும் விழுந்து விபத்து ஏற்படாத வண்ணம் வைக்கப்பட்டுள்ளதா என்பதை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும்.
முக்கியமாக மாநகராட்சி அதிகாரிகள் இவற்றிற்கான அனுமதி காலாவதியாகி விட்டதா என்பதை கண்டறிய வேண்டும். தற்பொழுது காற்று அதிகமான வேகத்தில் வீசுகிறது.
சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெருத்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில் திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகே உள்ள ரவுண்டானாவில் வைக்கப்பட்டுள்ள பெரிய பிளக்ஸ் போர்டு சாய்ந்து சாலையில் விழும் நிலையில் உள்ளது.
இதனால் விபத்து ஏற்படும்.
இதுபோன்ற பிளக்ஸ் போர்டுகளை உடனடியாக அகற்றி பொது மக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO