திருச்சியில் ஐந்து இடங்களில் நடைபெறும் புறா பந்தயம்

திருச்சியில் ஐந்து இடங்களில் நடைபெறும் புறா பந்தயம்

திருச்சி திருவானைக்காவல் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் புறா பந்தயம் நடத்தப்படுவது வழக்கம். இன்று (09.06.2023) திருச்சி திருவானைக்காவல் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் முதலில் கர்ண புறாக்களுக்கான பந்தயம் துவங்கியது. 

இதில் 25 ஜோடி புறாக்கள் கலந்து கொண்டன. கர்ண புறா பந்தயத்தில் திருச்சியில் உறையூர், எடத்தெரு, மலைக்கோட்டை, காட்டூர், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் பகுதிகளிலிருந்தும் போட்டி நடந்தது. பந்தயத்தில் கர்ண புறாக்களுக்கான விதிமுறைகள் வானில் 3 நாட்கள் 5 மணி நேரம் தொடர்ந்து பறந்து கர்ணம் அடிக்க வேண்டும்.

சரியான இடத்தில் வந்து புறாக்கள் அமர வேண்டும் என்ற விதிமுறைகளுக்குட்பட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. மது போன்ற போதை வஸ்துகளை பயன்படுத்துவர்கள் போட்டியில் இருந்து விலக்கப்படுவார்கள். அடுத்த வாரம் சாதா புறாக்களுக்கான போட்டி நடைபெற உள்ளது. வெற்றி பெறும் உரிமையாளர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படுகிறது. முன்னதாக பந்தயத்தில் பங்கேற்க வந்த புறாக்களுக்கு சீல் வைக்கப்பட்டு முறையான அனுமதியுடன் போட்டியில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இப்போட்டிகளில் ஆர்வமாக ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒன்பது நடுவர்கள் இப்போட்டியை கண்காணிக்கின்றனர்.

கர்ண புறா, சாதா புறா போட்டிகளை பாபா பாலாஜி விழா தலைவராக முன்னின்று நடத்துகிறார். நுழைவு கட்டணம் 2500 ரூபாய், வெற்றி பெறும் கர்ண புறா, சாதா புறாவுக்கு முதல் பரிசாக 15,055 ரூபாயும் மூன்று நாட்கள் ஏழு மணி நேரத்திற்கு மேல் பறந்த முதலிடம் பெரும் கர்ண புறா மற்றும் 3 நாட்கள் 10 மணி நேரத்துக்கு மேல் பறந்து முதலிடம் பெரும் சாதா புறாவிற்கு செல்போன் பரிசும் வழங்கப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn