தமிழ்நாடு காவல்துறை சட்டம் & ஒழுங்கு கூடுதல் இயக்குனர் திருச்சியில் ஆய்வு

தமிழ்நாடு காவல்துறை சட்டம் & ஒழுங்கு கூடுதல் இயக்குனர் திருச்சியில் ஆய்வு

திருச்சியில் காவல் துறை கூடுதல் இயக்குனர் சட்டம் & ஒழுங்கு K.சங்கர், தலைமையில் பொதுமக்களை நேரடியாக சந்திந்து, மாபெரும் மக்கள் குறைதீர்ப்பு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. பிற்பகலில் உறையூர் பிஷப் ஹீபர் கல்லூரி அரங்கத்தில் திருச்சி மாநகரம் மற்றும் திருச்சி சரக பகுதிகளில் உள்ள மாணவ - மாணவியருக்கு போதை பொருட்களின் தீமைகள் குறித்தும், போதை பொருட்கள் ஒழிப்பு குறித்தும் அமைக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு குழுக்கள் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. 

பின்னர் திருச்சி மாநகரம் மற்றும் திருச்சி சரகத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியமர்த்தப்பட்ட வரவேற்பாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வும், காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர்களுடன் முக்கிய வழக்குகளின் ஆய்வு கூட்டம் மாநகர காவல் அலுவலக கூட்ட அரங்கில் நடைப்பெற்றது. இதனை தொடர்ந்து காவல் துறை கூடுதல் இயக்குனர் சட்டம் & ஒழுங்கு K.சங்கர், தமிழக முதல்வர் இன்று (09.06.23)ந் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் திருச்சி மாவட்டம் பகுதிகளில் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவர் தங்க வைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமிற்கு சென்று, சிறப்பு முகாமின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பார்வையிட்டும், பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார்.

பின்னர் கே.கே.நகர் மாநகர ஆயுதப்படை மைதானத்திற்கு சென்ற காவல் துறை கூடுதல் இயக்குனர் சட்டம் & ஒழுங்கு திருச்சி மாநகரத்தில் ரோந்து பணிக்கு பயன்படுத்தபடும் இருசக்கர வாகனங்களை பார்வையிட்டும் ரோந்து அலுவர்களுக்கு அறிவுரை வழங்கும்போது, காவல்நிலையத்தில் உள்ள ரோந்து காவலர்களை சுழற்சி முறையில் பணியமர்த்த வேண்டும் என்றும், ரோந்து அதிகாரிகள் நகர்ந்து கொண்டே இருந்தால்தான் குற்றங்கள் குறைந்து பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும் எனவும், ரோந்து அதிகாரிகள் பொதுமக்களிடம் கவனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், ஒரு ரோந்து காவலர் தவறு செய்தாலும், ஒட்டுமொத்த காவல்துறைக்கும் அவப்பெயரை உருவாக்கும் எனவே பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ளவேண்டும் எனவும், பிரச்சனைகுரிய இடங்களுக்கு செல்லும்போது உடலில் பொருத்தக்கூடிய கேமராவை (Body Wom Camera)வை கண்டிப்பாக பொருந்தி செல்லவேண்டும் எனவும் பேசி அறிவுரைகள் வழங்கினார். 

மேலும் திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்திற்று வருகைபுரிந்தன் நினைவாக ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்று நட்டார்கள். பின்னர் கண்டோன்மெண்டில் உள்ள நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு, அங்கு உள்ள CCTV செயல்பாடுகளை பார்வையிட்டார். மேற்கண்ட ஆய்வு பணிகளின்போது காவல் ஆணையர் M.சத்திய பிரியா, மற்றும் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn