திருச்சி வழியாக சென்னை செல்லும் ரெயில்கள் சேவையில் மாற்றம்

திருச்சி வழியாக சென்னை செல்லும் ரெயில்கள் சேவையில் மாற்றம்

திருச்சி ரெயில்வே கோட்டம் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில்..... சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் பணிமனை, வேளச்சேரி மற்றும் விஜயவாடா ரெயில்வே கோட்டத்தில் உள்ள ரெயில் வழிதடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. 

அதன்படி வண்டி எண் : 12606 காரைக்குடி - சென்னை பல்லவன் அதிவிரைவு விரைவு ரெயில் காரைக்குடியில் இருந்து காலை 5:35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரை இயங்கும். இந்த ரெயில் இன்று (செவ்வாய்க்கிழமை) தாம்பரம் சென்னை எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கமாக வரும் சென்னை - காரைக்குடி ரெயில் வண்டி எண் : 12605 தாம்பரத்தில் இருந்து மாலை 4:15 மணிக்கு புறப்படும். 

மேலும் வண்டி எண் : 12636 மதுரை - சென்னை வைகை அதிவிரைவு ரெயில் மதுரையில் இருந்து காலை 6:40 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரை இயங்கும். இந்த ரெயில் இன்று தாம்பரம் - சென்னை எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக வண்டி எண் : 12635 தாம்பரத்தில் இருந்து மதியம் 2:20 மணிக்கு புறப்பட்டு செல்லும், 

அதேபோல் வண்டி எண் : 16159 சென்னை எழும்பூரில் இருந்து மன்னார்குடி வரை செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூர் - தாம்பரம் இடையே ரத்து செய்யப்பட்டு தாம்பரத்தில் இருந்து இரவு 11:25 மணிக்கு புறப்பட்டு மன்னார்குடிக்கு செல்லும், 

மேலும் வண்டி எண் : 12653 சென்னை எழும்பூர் - திருச்சி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் இருந்து நள்ளிரவு 12:10 மணிக்கு புறப்படும். இந்த மாற்றம் நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 3-ந்தேதி வரை நடைமுறையில் இருக்கும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

 அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision