அரசு டாஸ்மாகில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்த நபர்கள் கைது
திருச்சி மாநகர காவல் ஆணையராக கார்த்திகேயன், பொறுப்பேற்றது முதல் திருச்சி மாநகரத்தில் குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்க்கொள்ள திருச்சி மாநகர் காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள
கடந்த (18.12.22)-ந் தேதி திருச்சி காந்திமார்க்கெட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பிச்சை நகர் பகுதியில் உள்ள அரசு மதுபான கடைக்குள் புகுந்து அருவாளை காட்டி மிரட்டி மது பாட்டில்களை கொள்ளையடித்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, எதிரிகளை பிடிக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தது.
தனிப்படையினரின் புலன்விசாரணையில் சந்தேக நபர்களின் நடவடிக்கைளை தீவிரமாக கண்காணித்தும், சந்தேக நபர்களின் விபரங்களை சேகரித்தும், பாலக்கரை பகுதிகளில் CCTV கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் ஸ்ரீரங்கம் பகுதியில் சந்தேகத்திற்குகிடமான வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இரண்டு நபரை நிறுத்தி விசாரணை செய்தபோது, விசாரணையில் எதிரிகள் பாலக்கரையை சேர்ந்த ஜீட் ஆண்டனி (19), த.பெ.லியோ பெர்னாட்ஷா மற்றும் ஒரு நபர் ஆகியோர் மேற்படி மதுபான கடையில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர்.
மேலும் ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில் பகுதி மற்றும் காந்திமார்க்கெட் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் புகுந்து ஆயுதத்தை காண்பித்து மது பாட்டில்களை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். எனவே எதிரிகள் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், அரசு மதுபான கடைக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி மதுபாட்டில்களை கொள்ளையடிப்பவர்கள் என விசாரணையில் தெரியவருகிறது.
திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன் மேற்படி எதிரியை கைது செய்ய ஆணையிட்டார். மேற்கண்ட எதிரிகளிடமிருந்து வழக்கின் சொத்துக்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டு எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO