மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த ஆட்டோ ஓட்டுநர்களால் பரபரப்பு
மீட்டர் கட்டணத்தை 1.8 கிலோ மீட்டருக்கு 50 ரூபாயும், அதற்கு மேல் வரும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 16 ரூபாய் கட்டணத்தை அமல்படுத்தகோரியும், ஓலா, யூபர், ரேபிட்டோ ஆகிய கார்பேர்ட் நிறுவனங்களை திருச்சி மாவட்டத்தில் தடை செய்யக்கோரி திருச்சி மாவட்ட அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மனு அளித்தனர்.
இதுக்குறித்து ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுகையில்.....புதிதாக தமிழ்நாடு மீட்டர் ஆட்டோ என்று ஒரு நிறுவனம் (Corporate உந்துதலின பேரில் ) திருச்சியில் வந்து இருக்கிறது. 200 ரூபாய் கட்டினால் தான் 2000 ரூபாய்க்கு சவாரி தரப்படும் இல்லையென்றால் சவாரி முடக்கப்படும். ஆகவே உள்ளுர் மீட்டர் ஆட்டோ நாங்கள் எந்த கமிஷனும் இல்லாமல் மக்களுக்கு சேவை செய்து வருகிறோம்.
எங்களின் மீட்டர் கட்டணம் 1.8 -க்கு 50 ரூபாயும், அடுத்த வரும் கிலோமீட்டருக்கு 16 ரூபாயும் கட்டணமாக பெறுகிறோம். இதனால் தங்கள் கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanOll