குழந்தைகளின் நுண்ணறிவு திறன் அறிதல் சார்ந்த பயிற்சி
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர், அல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பெற்றோர்களுக்கு குழந்தைகளின் நுண்ணறிவு திறன் அறிதல் சார்ந்த பயிற்சி தமிழ்நாட்டில் முதல் முறையாக வழங்கப்பட்டது. அப்பயிற்சியினை பள்ளியின் சேர்மன் டாக்டர் ராம்குமார் தலைமை ஏற்கவும், பள்ளியின் முதல்வர் சந்திரோதயம் வரவேற்புரை வழங்கவும், விழா இனிதே துவங்கியது. விழாவில் துணை முதல்வர் மு.ராஜேந்திரன் மற்றும் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் 600க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் திரளாக பங்கு கொண்டனர்.
விழாவில் பயிற்சி தந்த பி ஜே ஆர் அகாடெமியை சேர்ந்த டாக்டர் பென்னட் ஜே ராக்லண்ட், 10000 கருத்தரங்குகளில் பங்கு பெற்றவர். இவர் 50000 ஆசிரியர்களுக்கும், 1000000 மாணவர்களுக்கும் நுண்ணறிவு பயிற்சி தந்தவர். 5000 ஐடி சார்ந்த ஊழியர்களுக்கும், 200 கம்பெனிகளுக்கும் ஆலோசனைகள் வழங்கியவர். இவர் நுண்ணறிவு திறனறிதலில் பல்வேறு சர்வதேச விருதுகள் பெற்றவர் ஆவார். இவரது நுண்ணறிவு பயிற்சி வருகை புரிந்த பெற்றோர்கள் அனைவரின் மனதையும் கவர்ந்தது.
பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளின் நுண்ணறிவை பற்றிய புரிதல் மற்றும் அதனை அறிந்து கொள்ளும் முறை பற்றிய விரிவான விளக்கம் வழங்கப்பட்டது. மேலும் தமிழ்நாட்டிலேயே முதல் பள்ளியாக அல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி இந்த சேவையை வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision