15 நிமிடம் வாகனங்களை சாலையில் நிறுத்தி போராட்டம்

15 நிமிடம் வாகனங்களை சாலையில் நிறுத்தி போராட்டம்
மோட்டார் வாகன சட்ட அமல்படுத்த கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஆட்டோ தொழிற்ச சங்கத்தினர் திருச்சியில் ஏழு இடங்களில் சிஐடியு தொழிற்ச சங்கத்தினர் மறியல் போராட்டம் நடத்தினர். இதில் 12 மணியிலிருந்து 12:15 மணி வரை 15 நிமிடம் சாலையில் வாகனங்களை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சியில் 12 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடி வருகிறது. இதில் 2500 ஆட்டோ ஓட்டுநர்கள் சிஐடியு தொழிற்சங்கத்தில் உள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். திருச்சி மத்திய பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட ஏழு இடங்களில் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

ஆன்லைன் அபராதம் என்ற பெயரில் நடத்தப்படுகிற வழிப்பறிக்கு முடிவு கட்டவும்,15 ஆண்டு வாகனத்தை அப்புறப்படுத்துகிறோம் என்ற அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும், டீசல் பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்தி, ஆட்டோ டாக்ஸிக்கு அரசாங்கம் கட்டணங்களை

நிர்ணயம் செய்து அரசாங்கமே செயலியை உருவாக்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 15 நிமிடம் மறியல் போராட்டம் நடைபெற்றது. உடனடியாக தமிழக அரசு தலையிட்டு மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn