உலக தற்கொலை தடுப்பு தினம் - விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவ, மாணவிகள்

உலக தற்கொலை தடுப்பு தினம் -  விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவ, மாணவிகள்

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் தற்கொலை தடுப்பு சங்கம், செஞ்சிலுவை சங்கம், செஞ்சிலுவை மனநல நல்வாழ்வு மையம் மற்றும் முதுகலை ஆராய்ச்சி மற்றும் சமூக பணித்துறை இணைந்து தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணியை இன்று நடத்தியது. இப்பேரணியை தாசில்தார் பிரகாஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வருவாய்த்துறை ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் துணை முதல்வர் முனைவர் சத்தியசீலன் தலைமை உரை ஆற்றி தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்தார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி விரிவாக்கத் துறையின் புல முதன்மை முனைவர் ஆனந்த் கிதியோன், சமூக பணித்துறை தலைவர் முனைவர் கார்ட்டர் பிரேம் ராஜ், மனநல நல்வாழ்வு துறையின் ஒருங்கிணைப்பாளர் மீனா ரெபேல்லோ, கிஃப்ட்சன் மற்றும் முனைவர் பார்த்திபன் தற்கொலை தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் கேத்தரின் மற்றும் டேவிட் சாம் பால் மற்றும் மனநல ஆலோசகர்கள் தேவசேனா டேனியல் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இப்பேரணியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். இப்பேரணியானது பிஷப் ஹீபர் கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கி கோபிஷேகபுரம் மாநகராட்சி அலுவலகம் வழியாக அரசு தலைமை மருத்துவமனை சாலை சென்று மதுரம் மருத்துவமனையில் நிறைவடைந்தது. இப்பேரணியில் மாணவர்கள் தற்கொலை தடுப்பு மற்றும் போதை ஒழிப்பு மற்றும் பாலியல் துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியவாறு பேரணியில் மாணவ - மாணவிகள் பங்கேற்றனர்.

இதே போன்று மாணவ மாணலியரிடையே வளர்ந்து வரும் தற்கொலைகளைத் தடுக்கவும், தற்கொலை என்பது எந்த விடையும் அல்ல என அறிவிக்கவும் ஏற்படுத்தப்பட்டது. இந்த நாள். திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரியில் மருத்துவ மாணவ - மாணவியர் இந்த தற்கொலை தடுப்பு நாளை வலியுறுத்தி ஊர்வலம் சென்றனர். தற்கொலை தடுப்பு சின்னம் உருவாக்கி உறுதிமொழி ஏற்றனர். தற்கொலை தவிர்ப்போம்; வாழ நல்ல சூழலை உருவாக்குவோம் என குறும்படங்கள் தயாரித்து அதை வெளியிட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision