திருச்சி கிழக்கு தொகுதியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு தொடரும் எதிர்ப்பு

திருச்சி கிழக்கு தொகுதியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு தொடரும் எதிர்ப்பு

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன், இன்று  கிழக்கு தொகுதிக்குட்பட்ட சேதுராமன் பிள்ளை காலனி, உலகநாதபுரம் பகுதியில் பாஜக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களுடன் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது  5 வருடமாக இப்பகுதிக்கு வராதவர் இன்று எதற்காக வந்துள்ளீர்கள் என்றும், தொடர்ந்து இப்பகுதியில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருவது குறித்து அமைச்சருக்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் பலமுறை தெரிவித்தும் எவ்வித பலன் இல்லை.

அதே போல அடிப்படை வசதிகள் இதுவரையிலும் 5 வருடங்களாக செய்து தரப்படவில்லை என்று குற்றம் சாட்டி அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை முற்றுகையிட்டு திரும்பிபோக கோரி அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அமைச்சருடன் வாக்கு சேகரிக்க வந்த அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை தாக்க முற்பட்டதால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

இதனையடுத்து அங்கு போலீசார் வந்து இருதரப்பினரையும் சமரசம் செய்ததுடன், வாக்கு சேகரிக்க வந்த அமைச்சரை பாதுகாப்புடன் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். மேலும் பிரச்சனை ஏற்படும் சூழல் உள்ளதால் அங்கு வாக்கு சேகரிக்க வேண்டாம் என்றும் அதிமுகவினரை போலீசார் மற்றும் பொதுமக்கள் தெரிவித்ததையடுத்து வாக்கு சேகரிக்க முடியாமல் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW