திருச்சியில் அதிக விபத்து ஏற்படும் சாலைகளில் பாதுகாப்பு வேக தடுப்பு, உயர்மட்ட பாலம்

திருச்சியில் அதிக விபத்து ஏற்படும் சாலைகளில் பாதுகாப்பு வேக தடுப்பு, உயர்மட்ட பாலம்

காந்தி ஜெயந்தி முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இது ஒரு பகுதியாக மணிகண்டம் ஒன்றியம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமை நடைபெற்ற கூட்டத்தில், திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் திருச்சி லெட்சுமணன் மனு அளித்தார். அதில் திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வண்ணாங்கோவில் - மணிகண்டம் சாலை சந்திப்பு மற்றும் நவலூர் குட்டப்பட்டு பிரிவு சாலைப் பகுதியில் அதிக விபத்து நடக்கும் பகுதியாகவும், அதிக வாகன நெரிசல் மிகுந்த பகுதியாகவும் உள்ளது.

அந்த பகுதியில் அடிக்கடி விபத்தி ஏற்படுவதால் அந்த பகுதியில் குறுகிய கால நடவடிக்கையாக காவல் துறை மூலம் வேகத்தடுப்புகள் ( பேரிகார்டு) அமைக்கவும், தேசிய நெடுஞ்சாலை சார்பில் பாதுகாப்பு வேக தடுப்பு முன்னேச்சரிக்கை சமிக்கைகள் அமைக்கவும் நீண்ட கால நடவடிக்கையாக உயர்மட்ட பாலம் ( Vehicle under pass) அமைக்க வேண்டும் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து கிராம சபை கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விரைவில் இது தொடர்பான அனைத்து அதிகாரிகளையும் நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision