மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோவில் கார்த்திகை தீபத்திருவிழா - மெகா திரி கொப்பறையில் தீபம் ஏற்றம்.

மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோவில் கார்த்திகை தீபத்திருவிழா - மெகா திரி கொப்பறையில் தீபம் ஏற்றம்.

தென் கைலாயம் என்றழைக்கப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா மட்டுவார்குழலம்மை உற்சவ மூர்த்திகளுக்கு தீபாராதனை செய்யப்பட்டு உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள சுமார் 40 அடி உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள 5 அடி உயர செப்புக்கொப்பரையில் 300 மீட்டர் அளவுள்ள பருத்தித் துணிகளைக் கொண்டு செய்யப்பட்ட திரியில் 900 லிட்டர் இலுப்பை எண்ணை, நல்லெண்ணை, நெய் ஆகியவைகளை ஊற்றி மகாதீபம் ஏற்றப்படுகிறது.

அதற்காக மலைக்கோட்டை தாயுமான சுவாமி சன்னதியில் மெகா சைஸ் திரி தயாரிக்கும்பணி கடந்த மூன்றாம் தேதி(03.12.24) தொடங்கி நடைபெற்று வந்தது. பின்னர் உச்சிப்பிள்ளையார் சன்னதி முன்பு உள்ள கார்த்திகை தீப கொப்பரையில்வைக்கப்பட்ட திரியில் 900 லிட்டர் நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் உள்ளிட்டவைகளை கொண்டு ஊறவைத்து, இன்று மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது.

கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை இத்திருக்கோயில் உதவி ஆணையர் அனிதா மேற்பார்வையில் திருக்கோயில் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision