திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் தடம் புரண்டு கிடந்த ரயில் பெட்டியால் பரபரப்பு

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் தடம் புரண்டு கிடந்த ரயில் பெட்டியால் பரபரப்பு

திருச்சி ரயில் நிலையத்தில் உள்ள அபாய சங்கு திடீரென ஒலித்தது. உடனே கட்டுப்பாட்டு அறைக்கு ரயில்வே பாதுகாப்பு மற்றும் மீட்பு படையினர் தொலைத் தொடர்பு கொண்டு திருச்சி குட்ஷெட் மேம்பாலம் அருகே ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அவசர அவசரமாக பொன்மலை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேரிடர் மீட்பு படை ரயில் இன்ஜின் மற்றும் ரயில் நிலையத்தில் தயாராக இருந்த பாதுகாப்பு மீட்புப்படையினர் அவசர அவசரமாக குட்செட் ரயில்வே யார்டு பகுதிக்கு விரைந்தனர்.

அங்க தடம் புரண்டு கிடந்த ரயில் பெட்டியை மீட்டனர். அதேபோல விபத்தால் பாதிக்கப்பட்ட 8 பேரையும் மீட்பு அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பிறகு நடந்தவை அனைத்துமே ஒத்திகை பயிற்சி என்று அறிவிக்கப்பட்டது.

இதனை அறிந்த பிறகு ரயில்வே ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். ரயில்வேயில் விபத்து ஏற்பட்டால் மீட்பு குழுவினரும் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளவும் கண்காணிக்கவும் இந்த ஏற்பாடு செய்ததாக ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn