பணம் கேட்டு மிரட்டிய போலி பத்திரிகையாளர் கைது

பணம் கேட்டு மிரட்டிய போலி பத்திரிகையாளர் கைது

திருச்சி ரெட்டை வாய்க்கால் பகுதியில் உள்ள வாசன்நகரை சேர்ந்த பாலகுமரன் (38). இவர் பல்வேறு மாத இதழ் பத்திரிக்கை போலி முகவரி அட்டை வைத்து கொண்டு பல அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மண்ணச்சநல்லூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பாலகுமரன் தான் ஒரு ரிப்போர்ட்டர் என கூறி அறிமுக படுத்தி கொண்டு மாதமாதம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இதையடுத்து பத்திரப்பதிவு அலுவலர் கோகிலா ஊடக முகவரி அட்டையை கேட்டப்போது பல்வேறு முகவரி அட்டைகளை காட்டியள்ளார். இதில் ( முதல் தமிழன், நம்ம ஊரு காவல்துறை, பாரத தூண்கள்) என பல முகவரி அட்டைகளை காட்டி மிரட்டியுள்ளார்.

இதில் சந்தேகமடைந்த அலுவலர் கோகிலா மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தால் புகாரின் அடிப்படையில் திருச்சி வாசன் நகரில் இருந்த பாலகுமாரனை இன்று காலை கைது செய்து மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் பத்திரபதிவு அலுவலர் கோகிலா கொடுத்த புகாரின் பேரில் பாலகுமாரன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில் பத்திரிக்கையாளர் என்ற பெயரில் பாலகுமரன் பல இடங்களில் மோசடி செய்த வழக்கில் பல காவல் நிலையங்களில் இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். சமயபுரம், ராம்ஜி நகர், சோமரசம்பேட்டை, சென்னை ஆகிய காவல்நிலையங்களில் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பல இடங்களில் பத்திரிக்கையாளர் என பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 3 முறை சிறை சென்ற பெருமை இவருக்கு உண்டு.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision