அரசு பள்ளிகளில் வகுப்புகள் துவக்கம் - மாணவ-மாணவிகளுக்கு முதல் நாளே புத்தகம்
பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறந்து மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு கடுமையான வெயிலின் தாக்கம் இருந்ததால் ஜூன் 10ஆம் தேதி பள்ளி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் துவங்கி உள்ளது. பள்ளிகள் வகுப்பறைகள் அனைத்தும் கடந்த வாரமே தூய்மை செய்யப்பட்டது.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்த மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து 45 நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. மாணவர்களை வரவேற்பதற்காக ஆர்வமுடன் பள்ளியில் ஆசிரியர்கள் காத்திருந்தனர். ஆனால் 8 மணிக்கு முன்பாகவே பள்ளிகளுக்கு மாணவர்கள் ஆர்வமுடன் வருகை தந்தனர்.
தொடர்ந்து பிரைமரி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கப்படும் இலவச புத்தகம் நோட்டு இன்றைய தினமே வழங்கப்பட்டது. தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி உள்ளது. அரசு பள்ளிகளில் மாணவிகளின் சேர்க்கை விகிதம் குறைந்து வரும் நிலையில், மண்ணச்சநல்லூர் அரசு மாதிரி மகளிர் பள்ளியில் மாணவிகளின் எண்ணிக்கை உயரத்தை தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திருச்சிராப்பள்ளி பீமநகர், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு புத்தகத்தை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வே.சரவணன், முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, நகர பொறியாளர் சிவபாதம்,
மாவட்ட நகர் ஊரமைப்புக் குழு உறுப்பினர் வைரமணி, மாநகராட்சி, பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision