இரத்த ஓவியத்திற்கு இன்று முதல் தடை - திருச்சியில் அமைச்சர் பேட்டி

இரத்த ஓவியத்திற்கு இன்று முதல் தடை - திருச்சியில் அமைச்சர் பேட்டி

திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்று வரும் கொரோனா பரிசோதனை பணிகளையும் விமான நிலையத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்... மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்பதாகவே தமிழக அரசு பன்னாட்டு விமான நிலையங்களில் பயணிகளை சோதனை செய்ய ஆரம்பித்தனர்.

மூக்கு வலியாக  செலுத்தப்படும் மருந்து தனியார் மருத்துவமனைகளில் மட்டும் கிடைக்கிறது. எனவே மத்திய  அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. தமிழக அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பூஸ்டர் தடுப்பூசி மூக்கு வழியாக செலுத்தும் மருந்தை மத்திய அரசு வழங்க வேண்டும். தமிழக அரசு இதனை இலவசமாக அரசு மருத்துவமனைகளில் பொது மக்களுக்கு செலுத்தப்படும். தமிழகத்தில் BF. 7 அலையாக மாறுமா அலையாக மாறுவதற்கான வாய்ப்புகள் ஆரூடமாகவோ கணிக்க முடியவில்லை.

சைனாவில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் அந்நிலை வராமல் இருப்பதற்கு பூஸ்டர் தடுப்பூசிகளை தமிழக அரசு செலுத்தி 90% நோய் எதிர்ப்பு சக்தியை மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கான கட்டுப்பாடு விதிமுறைகள் வருமா என்ற கேள்விக்கு வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்தால் மத்திய அரசின் ஆலோசனைப்படி கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படும். அந்நிலை வராமல் இருக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

உலகத்தில் புதிய கலாச்சாரம் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. ரத்தத்தை எடுத்து ஓவியங்கள் வரைந்து அதை விரும்பியவர்களுக்கு அனுப்புவது. அதை ஒரு தொழிலாகவே  பலர் செய்துவருக்கின்றனர். இதுபோன்ற கலாச்சாரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். நேற்று சென்னையில் பிளட் ஆர்ட் (Blood Art) நிறுவனங்களை சோதனை செய்து அதிகாரகள் எச்சரித்துள்ளனர்.

சுகாதார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் இந்த தொழிலை நிறுத்திக் கொள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அன்பு, நட்பு, காதல் மூன்றையும் பகிர்ந்து கொள்ள பல்வேறு வழிகள் உள்ளது அதற்கு ரத்த ஓவியங்கள் தான் அதற்கான வழி என்று கூறுவது தவறு.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO