முதல்வர் திருச்சி வருகை - அமைச்சர் அன்பில் மகேஷ் பதிவிட்ட புகைப்படம்

முதல்வர் திருச்சி வருகை - அமைச்சர் அன்பில் மகேஷ் பதிவிட்ட புகைப்படம்

தமிழக முதலமைச்சர் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சி வருகை தந்துள்ள நிலையில், திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள போஸ்டர்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரின் முகமும் ஒரு பாதியாக அமைய பெற்றுள்ளது.

இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து மாண்புமிகு முதல்வரே! அமைச்சரே! வருக வருக என பதிவிட்டுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH 

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO