அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டைப்பையில் தொப்புள் கொடியுடன் பச்சிளம் குழந்தை

அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டைப்பையில் தொப்புள் கொடியுடன் பச்சிளம் குழந்தை
திருச்சி மாவட்டம் முசிறியில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியின் மேலே இன்று காலை பை ஒரு இருந்துள்ளது. பையில் அசைவு தென்படவே அவ்வழியே சென்ற மருத்துவமனை ஊழியர் பையை திறந்து பார்த்தபோது அதனுள் பச்சிளம் பெண் குழந்தை இருந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த ஊழியர் இதுகுறித்து தலைமை மருத்துவர் ஸ்ரீகாந்துக்கு தகவல் தெரிவித்தார். அவரது உத்தரவின் பேரில் உடனடியாக பணியில் இருந்த மருத்துவர்கள் குழந்தையை மீட்டு அவசர சிகிச்சை அளித்து பத்திரமாக இன்குபேட்டரில் வைத்தனர். பின்னர் முசிறி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பானுமதி, மாலிக் ஆகியோர் அங்கிருந்த சிசிடிவி கேமரா மற்றும் மருத்துவமனை வளாகத்தில் இருந்தவர்களிடம் பச்சிளம் குழந்தையை விட்டு சென்றவர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

முதலுதவி சிகிச்சைக்கு பின் பச்சிளங்குழந்தை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு 28 நாட்கள் அங்கு பராமரிக்கப்பட்டு அங்கிருந்து திண்டுக்கல்லில் செயல்பட்டுவரும் தொட்டில் குழந்தை திட்டம் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என மருத்துவ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

பெற்ற குழந்தையை செப்டிக் டேங்க் மீது வைத்துவிட்டுச் சென்ற அந்த தாய் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் முசிறி மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn