திருச்சியில் பழிக்கு பழியாக வாலிபர் வெட்டி கொலை. 24 மணி நேரத்திற்குள் 10 குற்றவாளிகளை கைது செய்த திருவெறும்பூர் தனிப்படை போலீசார்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தைச் சேர்ந்தவர் குழந்தை (எ) நொண்டி குழந்தை இவரது மகன் பெலிக்ஸ்ஜான்சன் (28) என்பவர் கடந்த 12ம் தேதி மாலை ஆட்டோவில் மாவடிகுளம் அருகே சென்ற பொழுது மர்ம நபர்கள் வழிமறித்து சராமரியாக வெட்டியுள்ளனர். இதில் பெலிக்ஸ் ஜான்சன் முகம் சிதைந்ததோடு, கைவிரல்கள் துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் பற்றி திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்வதற்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின்பேரில் திருவெறும்பூர் டிஎஸ்பி சுரேஷ்குமார் மேற்பார்வையில், திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் துரைராஜ், துவாக்குடி காவல் ஆய்வாளர் ஞானவேலன், நவல்பட்டு காவல் ஆய்வாளர் வெற்றிவேல் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில்
கடந்த சில மாதங்களுக்கு முன் திருச்சி பொன்மலைபட்டி கடைவீதியில் சின்ராசு என்பவரை வெட்டி கொலை சொந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அலெக்ஸ் என்ற ரவுடியின் தம்பி பெலிக்ஸ் ஜான்சன் என்பது தெரியவந்தது
மேலும் சின்ராசு கொலை செய்யப்பட்ட போது அவரது நண்பர்கள் விரைவில் என்று போஸ்டர் அடித்து இருந்தனர். இதனால் பெலீக்ஸ் ஜான்சன் கொலை பழிக்குப்பழி வாங்குவதற்காக சின்ராசு வின் சகோதரர்களான பொன்மலைப்பட்டி கொட்டப்பட்டு ஜேஜே நகரை சேர்ந்த ஜெயராமன் மகன்களான சக்திவேல்(21), ரமேஷ் (26), அவரது நண்பர்களான சுப்பிரமணியபுரம் மீன்கிரஸ் தெருவை சேர்ந்த சிவகுமார் மகன் மனோஜ் (எ) மனோஜ் குமார்(19), குண்டூர் பர்மா காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் மகன் சுபாஷ் (19),
சுப்பிரமணியபுரம் சுந்தர்ராஜ் நகரை சேர்ந்த மகேந்திர வர்மா மகன் நிஜி (எ) பிரகாஷ் (19), சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் நகரை சேர்ந்த மகேந்திரன் மகன் கிஷோர் (19), பொன்மலைப்பட்டி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த ரபேல் மகன் ஜோஸ்வா பீட்டர் (21),
பொன்மலைப்பட்டி மல்லிகை தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் மனோஜ் (எ) மனோஜ்குமார் (21), கொட்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் சிவராம் (எ) மான் (23), பொன்மலைப்பட்டி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த ரபேல் மகன் டார்வின் ஆன்ரோ (24) ஆகிய 10 பேரும் சேர்ந்து தான் பெலிக்ஸ் ஜான்சனை கொலை செய்ததாக தனிப்படை போலீசாருக்கு தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து அவர்கள் 10 பேரையும் 24 மணி நேரத்திற்குள் கைது செய்ததோடு கொலைக்கு பயன்படுத்திய வீச்சருவாள், 2 கத்தி, இரண்டு வால், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் பாராட்டினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn