திருச்சியில் பூத் சிலிப்புகள் வழங்க கட்டுப்பாடு - மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி
நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்களிப்பு குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு ராட்சத பலூனை மாவட்ட தேர்தல் அலுவலர் பறக்கவிட்டார். இன்று முதல் அலுவலர்களால் வீடுகள் தோறும் பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது, அத்துடன் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக புகார் அளிப்பது, பெயர் சேர்த்தல், நீக்கல் அடங்கிய கையேடும் வழங்கப்பட்டு வருகிறது.
10 தினங்களுக்குள் வாக்காளர் விபரங்கள் அடங்கிய பூத் ஸ்லிப் சென்றடையும். மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்.... பூத் ஸ்லிப் வழங்கும் பணிகளில் அரசியல் கட்சியினரோ, அரசியல் குறியீடு கொண்டு எவரும் ஈடுபடக்கூடாது. மாவட்ட நிர்வாகம் மட்டுமே வாக்காளர் விபரம் அடங்கிய பூத்ஸ்லிப் வழங்க வேண்டும்.
நேற்றைய தினம் வரை 1 கோடி 47 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சரியான ஆவணங்கள் சமர்ப்பித்ததால் 96 லட்சம் மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாக அரசியல் கட்சிகள் மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுபிதா மூலம் பேரணி மற்றும் கூட்டங்கள் நடத்த ஆன்லைன் மூலமாக அப்ளை செய்து அனுமதி பெறவும் வேட்பாளர்கள் சார்ந்தவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்களுக்கு 100 நிமிடங்களுக்குள் மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய பதில் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோடை வெயிலில் இருந்து தப்பித்துக் கொள்ள பொதுமக்கள் அதிகம் தண்ணீர் அருந்த வேண்டும். வாக்குச்சாவடி மையங்களில் கோடை வெயில் தாக்கம் மக்களை தாக்காதவாறு நிழல் பந்தல்கள் அமைக்கப்பட உள்ளது. வாக்காளர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும், அசவுகரியமும் ஏற்படாத வகையில் தேர்தல் நடைபெறும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision