தனியார் கம்பெனி ஊழியர் இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது

Sep 18, 2023 - 13:05
Sep 18, 2023 - 13:20
 631
தனியார் கம்பெனி ஊழியர் இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் குருசந்திரன் (30). இவர் துவாக்குடிப் பகுதியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கம்பெனியின் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 15 ஆம் தேதி தனது பைக்கை கம்பெனி அருகே நிறுத்திவிட்டு திரும்ப வந்து பார்த்தபோது பைக் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக குருசந்திரன் துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்தபோது திருவெறும்பூர் அருகே உள்ள அண்ணா நகர் சிலோன் காலனியை சேர்ந்த ஹரன்குமார் (19) என்பது தெரிய வந்தது.

அதன் அடிப்படையில் ஹரன்குமாரை துவாக்குடி போலீசார் கைது செய்ததோடு அவனிடம் இருந்து குருசந்திரன் பைக்கை பறிமுதல் செய்ததோடு, திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision