6ம் வகுப்பு முதல் 8 வகுப்பு மூட முடிவு - பெற்றோர்கள் எதிர்ப்பு

6ம் வகுப்பு முதல் 8 வகுப்பு மூட முடிவு - பெற்றோர்கள் எதிர்ப்பு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவன வளாகத்தில் காமராஜபுரம் பகுதியில் இயங்கி வரும் சாரதா நடுநிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை தொடர்ந்து இயங்க வேண்டும் என கோரி பெற்றோர் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனுவின் நகலை திருவெறும்பூர் வட்டார கல்வி அலுவலர் ரெஜி பெஞ்சமின் இடம் வழங்கினார்கள்.

திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவன வளாகத்தில் சாரதா நடுநிலைப்பள்ளி இயங்கிவருகிறது. இந்தப் பள்ளி துவாக்குடி தெற்கு மலையில் கல் உடைக்கும் தொழிலாளர்கள் குழந்தைகள் கல்வி கற்பதற்காக பெல் நிர்வாகத்தால் விவேகானந்த தொடக்கப்பள்ளி மற்றும் சாரதா நடுநிலைப்பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வைத்தனர். இந்த நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டில் இருபள்ளிகளும் ஒன்றாக இணைந்தன. இரண்டும் தபோவன நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த நிலையில் இந்த பகுதியில் ஒரு பள்ளியாவது இயங்கி வருவதால் அந்தப் பகுதி மக்கள் நிம்மதி அடைந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 13ம் தேதி பெல் நிர்வாகத்திலிருந்து பள்ளியின் செயலரே கலந்து கொள்ளாமல் பாய்லர் பிளாண்ட் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் பெற்றோர் ஆசியரியர் கூட்டம் நடத்தினார். இப்பள்ளியில் 6, 7, 8 இந்த மூன்று வகுப்புகளில் பயிலும் 48 மாணவர்களின் எண்ணிக்கையானது சொற்பமே. இந்த மூன்று வகுப்பு ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஊதியமாக சுமையாக இருப்பதாக கூறியதோடு சுமார் ரூ.55 ஆயிரம் முதல் ரூ.60, ஆயிரம் செலவழிக்க வேண்டி உள்ளது. அதனால் 6,7,8 வகுப்புகளை நிறுத்துகிறோம் என்று கூறுகின்றனர்.

கடந்த கொரோனா காலத்தில் ஏற்பட்ட இடர்பாடும், கல்வி முடியாத சூழலால், குழந்தைகளின் கல்வி பயில் முன்னேற்றம் சிக்கலுக்கு உள்ளானது. இந்த சிக்கலானது பள்ளியில் மாணவர்களின் இருப்பை கேள்ளிக்குறியாக்கியது உடன், பள்ளியில் மாணவர் வருகையும் குறையத் தொடங்கியது என்பதை பெற்றோர்களாகிய எங்களுக்கு தெரியும். ஆனால் இதனை முன்னாள் தலைமை ஆசிரியர் உணர்ந்ததாக தெரியவில்லை. பெற்றோர்களிடம் கலந்தாலோசித்து கருத்துக்களை கேட்டறிந்து ஜனநாயக பூர்வமாக முடிவெடுக்காமல், நிர்வாகம் எடுத்த முடிவை அறிவிக்கவே வந்திருந்தது வருத்தமளிக்கிறது.

எனவே எங்களின் நிலைமையை உணர்ந்து இந்த முடிவை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பெற்றோர்கள் தரப்பிலிருந்து கூறினோம். ஆனாலும் அவர் அக்கூட்டத்தில் 6, 7, 8 வகுப்புகளை மூடப் போவதாகவும் அக்குழந்தைகளை பாய்லர் பிளாண்ட் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்க்குமாறு செயலாளர் வற்புறுத்துகின்றனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை கடந்து எதிர்புறம் உள்ள பள்ளிக்கு எங்களது பிள்ளைகள் செல்வது மிகவும் ஆபத்தானது. எடுத்துக் கூறியும் முன்னாள் தலைமை ஆசிரியர் ஏற்க மறுக்கிறார்.

குழந்தைகளின் கல்வியை அவர் குழி தோண்டி புதைப்பதும், அதற்கு தபோவனம் துணை போவதும், பெல் கேள்வி கேட்காமல் இருப்பதும் கல்வி அமைச்சரின் சொந்த தொகுதியிலேயே நடப்பது வருத்தமா உள்ளது. எனவே. இந்த பிரச்சனையில் தலையிட்டு பள்ளியை கல்வி அமைச்சர் காப்பாற்றுவார் என நம்புகின்றோம். என்று தமிழக முதல்வர், பெல் மனிதவள பொது மேலாளர், திருச்சி மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு மனு கொடுத்துள்ளனர்.

அதன் நகலை பெற்றோர் சங்கத்தினர் திருவெறும்பூர் வட்டார கல்வி அலுவலர் ரெஜி பெஞ்சமிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ரெஜி பெஞ்சமின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முன் நிர்வாகத்திடம் பேசிவிட்டு தகவல் சொல்வதாக கூறினார்.