போலீசார் முன்பு ஆட்டோ சங்கங்களுக்கு இடையே அடிதடி

போலீசார் முன்பு ஆட்டோ சங்கங்களுக்கு இடையே அடிதடி

திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் சிஐடியு என்ற ஆட்டோ சங்கம் இருந்து வந்தது. இந்த சங்கத்தினை சேர்ந்த சிலர் நால்ரோடு பகுதியில் ஒரு குழுவாகவும், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மற்றொரு குழுவாகவும் என இரண்டு ஆட்டோ ஸ்டாண்டுகள் செயல்பட்டது.

இந்நிலையில் நால்ரோடு பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டிலும் ஆட்டோக்களை நிறுத்தி வந்தனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுனர்களுக்கு வருமானம் பாதிக்கப்பட்டது. இது குறித்து சிஐடியு நிர்வாகத்தினரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் குழுவினர் இந்து முன்னணி ஆட்டோ சங்கம் என்ற அமைப்பில் இணைத்துக் கொண்டு அதற்கான போர்டுகளை வைத்துள்ளனர். இதனை அறிந்த சி ஐ டி யு ஆட்டோ சங்கத்தினர் பத்துக்கும் மேற்பட்டோர் இந்து முன்னணி ஆட்டோ சங்கத்தினரை தாக்க முயன்றனர். இதில் இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த நிலையிலும், போலீசார் முன்பு இரு ஆட்டோ சங்க ஓட்டுநர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்காததால் போலீசார் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision