பெண்களிடம் அத்துமீறல் - தமிழகத்தில் விநாயகர் சிலைகளை எடுக்க மாட்டோம் - இந்துமுன்னணி முருகானந்தம் திருச்சியில் பேட்டி
திருச்சி மேலப்புதூர் அருகில் உள்ள விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்துமுன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்.... இந்துக்களுக்கு ஹிந்து மதம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இந்து தர்ம கருத்துக்களை எடுத்து கூறவும், விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்கள் நடத்தப்படுகிறது.
இந்து தர்மங்களை எடுத்துக் கூறுவதற்கான ஏற்பாடுகள் கோவில்களில் செய்யப்படவில்லை. இந்து தர்மத்தை முன்னெடுப்பவர்கள் ஜாதியைப் பற்றி பேசுவதில்லை. இவர்கள்தான் ஓட்டுக்காக ஜாதி பேதங்களை பேசி பிரிவினையை உருவாக்குகின்றனர். அரசியல் கட்சியினர் போல், ஹிந்து அமைப்பினர் யாரும் ஜாதி பேதம் தூண்டுவதில்லை.
மக்களின் அரசியல் கட்சியினர் ஒற்றுமையை சீர்குலைகின்றனர். தமிழகம் முழுவதும் எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட மிகுந்த ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். ஆனால் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மட்டும் போலீசாருக்கு தனி அறிவுறுத்தல் செய்வது போல், எந்த இடத்திலும் சிலை பிரதிஷ்டை செய்ய விடாமல் தடுக்கின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு விநாயகர் பிரதிஷ்டை செய்ய முயன்ற போது பெண்கள் மற்றும் ஆண்கள் மீது தாக்கி இரத்த காயம் ஏற்படுத்தி அராஜக போக்கில் செயல்பட்டது கண்டிக்கதக்கது. வி.களத்தூரில் பெண்களை அடித்து துன்புறுத்தி அநியாயம் செய்துள்ளனர். உயர் போலீஸ் அதிகாரிகள் தலையிட்டு வி.களத்தூரில் போலீஸ் அட்டகாசத்திற்கு தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் மற்ற இடங்களில் பிரதிஷ்டை செய்த சிலைகளை எடுக்க மாட்டோம்.
தேர்தல் நேரத்தில் அனைத்து மதத்தினரும் ஒன்று என்று பேசி ஓட்டு சேகரிக்கும் திமுக தலைவர் தமிழக முதல்வரான ஸ்டாலின், இந்து மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்லவில்லை. திமுக தலைவராக இருக்கும் ஸ்டாலின் வாழ்த்து சொல்ல வேண்டியதில்லை. தமிழக முதல்வராக இருக்கும் ஸ்டாலின் கண்டிப்பாக வாழ்த்து சொல்லி இருக்க வேண்டும்.இது போன்ற செயல்களால் இந்து மதத்தை அழிக்க முயற்சிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று அவர் தெரிவித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision