ஆஸ்கார் லயன்ஸ் கிளப் சார்பில் அரசு துணை சுகாதார நிலையம் திறப்பு

ஆஸ்கார் லயன்ஸ் கிளப் சார்பில் அரசு துணை சுகாதார நிலையம் திறப்பு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோவில் ஊராட்சியில் அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சியாக இருந்து வருகிறது. இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது‌, கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனை செய்வது உள்ளிட்ட பல்வேறு மருத்துவ வசதிகளுக்காக கடும் சிரமமடைந்து வந்தனர்.

இதனால் பிச்சாண்டார் கோவில் ஊராட்சியில் அரசு துணை சுகாதார நிலையம் அமைத்து தர அப்பகுதி மக்கள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் ஆஸ்கார் லயன்ஸ் கிளப் சார்பில் அரசு துணை சுகாதார நிலையம் திறக்க திட்டமிடப்பட்டு அதன்படி திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே ஆர்.கே.வி நகரில் புதிதாக அரசு துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

லயன்ஸ் கிளப் தலைவர் வி.பி. தங்கமணி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக மண்ணச்சநல்லூர் வட்டாச்சியர் பழனிவேல், மண்ணச்சநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு அரசு துணை சுகாதார நிலையத்தை திறந்து வைத்து வாழ்த்தி பேசினர்.

விழாவில் ஆஸ்கார் லயன்ஸ் கிளப் துணைச்செயலாளர் விஜயகுமார், சங்க உறுபினர்கள் சக்திவேல்முருகன், செந்தில் குமார், மைக்கேல்ராஜ், வி.பி.முருகேஷ், மண்ணச்சநல்லூர் சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணி, ஆய்வாளர் முகுந்தன், செவிலியர்கள் செந்தாமரை, கனகா, சுஜாதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக ஆஸ்கார் லயன்ஸ் கிளப் சங்க செயலாளர் ஜெயக்குமார் வரவேற்று பேசினார். பொருளாளர் சண்முகா வடிவேலு நன்றி தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision