கிரிக்கெட் வீரர் இலக்கை அடைய தியாகம் செய்ய வேண்டும் - இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திருச்சியில் பேச்சு

கிரிக்கெட் வீரர் இலக்கை அடைய தியாகம் செய்ய வேண்டும் - இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திருச்சியில் பேச்சு

தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் திருச்சியில் இன்று தமிழக அணிக்காக விளையாடும் அணிதரப்பு கிரிக்கெட் வீரர்களும் கிரிக்கெட் பயிற்சி பெறும் வகையில், தேனி மற்றும் திருப்பூரில் சேட்டிலைட் சென்டர் திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து, திருச்சியில் சாரநாதன் பொறியியல் கல்லூரியில் சேட்டிலைட் சென்டர் பேஸ் - 2 இன்று திறந்து வைக்கப்பட்டது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் மற்றும் பயிற்சியாளர் ராபின் சிங் பங்கேற்று சேட்டிலைட் கிரிக்கெட் பயிற்சி மைதானத்தை திறந்து வைத்தார். அதன் பின், அவர் கூறுகையில்.... விளையாட்டு வீரர்கள் அடுத்தவர் மீது குறைகூறாமல் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள். நீங்கள் எடுத்துக் கொள்ள போகும் பயணம் மிக நீளமானது. வாழ்கையில் எதுவும் சுலபமாக கிடைக்காது.

ஒழுக்கமாக இருந்து உங்களுடைய திறமையை வளர்த்துக் கொண்டேயிருந்தால் தான் முன்னேற முடியும். கிரிக்கெட் விளையாட்டு துறையில் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. குறிக்கோளை அடைவதற்கு சொந்தங்கள், நட்பு வட்டாரம் இவற்றை தியாகம் செய்ய வேண்டியிருக்கும். அதன் மூலம் வெற்றியை பெற முடியும் என தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision