அறிவியல் கண்காட்சி - கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி அசத்திய மாணவர்கள்

அறிவியல் கண்காட்சி - கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி அசத்திய மாணவர்கள்

பள்ளி மாணவர்களின் அறிவியல் கருத்துக்களை செயல் திறன்கள் மூலம் வெளிப்படுத்தி புதிய சாதனை படைக்கவும், ஆழ்மனது எண்ணங்கள் செயல் வடிவம் பெற வேண்டும் என்பதற்காகவும், திருச்சி கிராப்பட்டி பகுதியில் உள்ள செல்லம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

இந்தப் பள்ளியில் படிக்கும் LKG முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் கலந்துகொண்டு தங்களுடைய அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தி செய்முறை விளக்கம் அளித்தனர். இந்த கண்காட்சியை பள்ளி முதல்வர் அருள்குமார் பார்வையிட்டு தொடங்கி வைத்தார். இதில் மாணவர்கள் பஞ்சபூதங்கள் என்ற தலைப்பில் நிலத்தில் ஏற்படும் அதிசயங்கள், உபயோகங்கள், நாம் அடையும் பலன்கள்,

நீர் மண்டலத்தின் முழு காட்சி ,காற்றின் மாசு மற்றும் அதனை சீரமைக்க எளிய வழிகள், நெருப்பின் வேதியல் விஞ்ஞானம், மற்றும் நியூக்ளியர் பாம் வெடித்து சிதறுவது போல பஞ்சுகளை வைத்து தத்ரூபமாக செய்திருந்தனர். எரிமலை வெடித்து சிதறுவது போலவும் காட்சிப்படுத்தி அசத்தி இருந்தனர். குறிப்பாக ஆகாயத்தின் அறிவியல் அதிசயங்களான சந்திரயான் மற்றும் விக்ரம் லான்டர் இந்த கண்காட்சியில் பார்வையாளர்களை கவர்ந்தன.

இந்த கண்காட்சியின் மூலம் மாணவர்களின் படைப்புத்திறன், சிந்தனை செழுமை, முழுமையான கற்றல் திறன் மற்றும் மாணவச் செல்வங்களுக்குள் புதைந்திருக்கும் திறன்களை வெளிக்கொண்டு வரும் களமாக இந்த அறிவியல் கண்காட்சி அமைந்திருப்பதாக ஆசிரியர்கள் பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision