திருச்சி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் சேற்றில் சிக்கும் அவலம்

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் சேற்றில் சிக்கும் அவலம்

திருச்சி மாவட்ட நீதிமன்ற வவளாகத்தில் மொத்தம் 21 நீதிமன்றங்கள் உள்ளது. இதில் சிவில், கிரிமினல் வழக்குகளுக்கு தனித்தனியாக நீதிமன்ற கட்டிடங்கள் உள்ளது. அதேபோல் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் சில வருடங்களுக்கு முன்னதாக புதிதாக கட்டப்பட்டது. திருச்சி மாவட்ட நீதிமன்றத்திற்கு உள்ளே வணிக வரித்துறை அலுவலகம், வனத்துறை அலுவலகம், நீதிபதிகளின் குடியிருப்பு, மின்வாரிய அலுவலகம், பொது வினியோக திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கான மண்ணெண்ய் வழங்கும் நிலையமும் உள்ளது. இப்பகுதிகளுக்கு வரும்போது மக்கள் ஏற்கனவே மழை காலங்களில் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். 

தற்போது நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான வழக்குகளை சந்திக்கும் திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மழை நீர் தேங்கி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் நீதிமன்றத்திற்குள் செல்வதற்கே பெரும் சிரமப்படுகின்றனர். மேலும் சாலைகள் முறையாக நீதிமன்ற வளாகத்திற்குள் போடப்படவில்லை. தற்போது ஆங்காங்கே மழை நீர் 10 நாட்களுக்கும் மேலாக தேங்கி உள்ளது.  சேறும் சகதியுமாக உள்ள பகுதியை நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனம் கடக்கும் பொழுது சிக்கிக் கொள்கின்றன.

இதனால் நீதிமன்ற வழக்குகளுக்கு வருபவர்கள், வழக்கறிஞர்கள் உடைகள் அசுத்தமாகி பணிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.சாகசம் செய்தும் தான் நீதிமன்றத்திற்க்குள் செல்கிறார்கள் என்பது காட்சிகளாக தெரிகிறது. மேலும் முக்கியமாக திருச்சி குற்றவியல் நீதிமன்ற வளாகத்திற்கு அருகே உள்ள கழிவுநீர் தற்போது இந்த மழைநீருடன் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுவதாக உள்ளது என தெரிவிக்கின்றனர்.

இதற்கு உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வழக்கறிஞர்களும், பொதுமக்களும் கேட்டுக் கொண்டுள்ளனர். பொதுமக்களின் இறுதி தீர்வாக உள்ள நீதிமன்ற வளாகமே இப்படி மழை நீரினால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn