திருச்சி தலைமை தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - பரபரப்பு!!

திருச்சி தலைமை தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - பரபரப்பு!!

திருச்சி தலைமை தபால் நிலையத்திற்கு லெட்டர் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி தலைமை தபால் நிலையத்தில் திருச்சி மக்கள் பலர் தினசரி வந்து செல்லும் ஒரு முக்கிய இடமாக இது இருக்கிறது. கடிதம் மற்றும் ஏடிஎம் பண பரிவர்த்தனை போன்ற சேவைகளுக்காக திருச்சியின் ஒரு முக்கிய பகுதியாகவும் இது உள்ளது.

Advertisement

இந்நிலையில் இன்று திருச்சி தலைமை தபால் நிலையத்திற்கு லெட்டர் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது முதற்கட்ட விசாரணையில் எடமலைப்பட்டி புதூரில் இருந்து ஒரு மர்ம நபர் எழுதி தலைமை தபால் நிலையத்திற்கு லெட்டர் மூலம் அனுப்பி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. அக்கடிதத்தில் வருகின்ற அஞ்சல் தலை வெளியீடு சிறப்பு நிகழ்ச்சி நடத்தினால் வெடிகுண்டு வெடிக்கும் என எழுதியுள்ளார்.

இதனால் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

வாகன நிறுத்துமிடம், தபால் சேகரிக்கும் இடம், தபால்களை அனுப்பும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் நான்கிற்கு மேற்பட்ட வெடிகுண்டு நிபுணர் குழு தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை வெடிக்க கூடிய பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY