DYFI தலைவரை வெட்டிய பாஜக ஆதரவாளர் - மறியல் பதட்டம்
திருச்சி அரியமங்கலம் அம்மாக்குளம் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளைத்தலைவர் தௌவ்பிக் என்பவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்ய முயன்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
உயிருக்கு ஆபத்தான முறையில் திருச்சி அரசு மருத்துவமனையில் தவ்பிக் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், திருச்சி அரசு பொது தலைமை மருத்துவமனை முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.