திருவெறும்பூர் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையத்திற்கான கேடயம் பெற்றுள்ளது

திருவெறும்பூர் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையத்திற்கான கேடயம் பெற்றுள்ளது

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் காவல் நிலையத்தை தமிழக முதலமைச்சர் அவர்கள் 2019-ம் ஆண்டிற்கான சிறந்த காவல் 
நிலையமாக அறிவித்துள்ளார். மேற்படி காவல் நிலையத்தில் அன்றைய ஆண்டில் 8 குற்றவாளிகளை திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் பரிந்துரையின்படி குண்டர் சட்டத்திலும், 35 குற்ற 
வழக்குகளில் 34 வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது செய்தும்

களவுபோன சொத்துக்களை கைப்பற்றியும், 2 கண்ணக்களவு வழக்குளில் சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது செய்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தந்தும், 40 பிடியானையில் உள்ள குற்றவாளிகளை கைது செய்தும் சிறப்பாக பணிப்புரிந்துள்ளனர். மேலும் 40 குற்றவாளிகளுக்கு 110 கு.வி.முசா-ன்படி பினைய பத்திரம் வழங்கப்பட்டது.

அதேபோல் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து பணிகளையும் சிறந்த 
முறையில் செய்து, திருச்சி மாவட்ட காவல் துறைக்கு நற்பெயரை பெற்றுத்தந்த 
திருவெறும்பூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர், 2 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 7 காவல் ஆளிநர்களை

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி நேரில் வரவழைத்து தமிழக அரசு அளித்த "சிறந்த காவல் 
நிலையம் என பொறிக்கப்பட்ட கேடயத்தை” காவல் ஆய்வாளர் அவர்களிடம் வழங்கி 
அனைவரையும் வெகுவாக பாராட்டினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn