திருச்சி என்ஐடியில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி!

திருச்சி என்ஐடியில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி!

திருச்சி துவாக்குடி அருகே உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்ஐடி) காவலாளி பணி வாங்கி தருவதாகக் கூறி என்ஐடி பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் போலி வங்கிக் கணக்கு தொடங்கி அதில் பணப் பரிவா்த்தனை நடைபெற்றுள்ளது தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்து என்ஐடி பதிவாளா் சின்ட்ரெல்லா அளித்த புகாரின்பேரில் துவாக்குடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிந்துள்ளார்.

Advertisement

காவலாளி பணி வாங்கித் தருவதாக கூறி பண மோசடி நடைபெற்றிருப்பது குறித்து துவாக்குடி காவல் நிலைய ஆய்வாளர் காந்திமதி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.