டெல்லி செல்ல முயன்ற அய்யாக்கண்ணு - திருச்சி ரயில் நிலையத்தில் கைது!

டெல்லி செல்ல முயன்ற அய்யாக்கண்ணு - திருச்சி ரயில் நிலையத்தில் கைது!

டெல்லியில் நடைபெறும் வேளாண் சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்யும் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்திலிருந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தலைநகர் டெல்லிக்கு செல்வதற்காக இன்று காலை திருச்சி ரயில் நிலையத்திற்கு ஏராளமான விவசாயிகள் வந்தனர்.

Advertisement

ஆனால் ரயில் நிலையத்தில் காவல்துறையினரால் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் கைது செய்யப்பட்டு கன்டோன்மென்ட் அருகில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் அடைத்தனர். 

இதனால் காலை ரயில் நிலையங்களுக்கு வந்த மற்ற பயணிகள் மிகுந்த சிரமத்தோடும் நெரிசலில் சிக்கிய வண்ணம் ரயில் நிலையம் முன்பாக பலத்த பரிசோதனைகளுக்குப் பிறகு தான் அனுமதிக்கப்பட்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS