திருச்சியில் முதலாம் உலகப் போர் நினைவிடத்தில் சீரமைக்கும் பணியை ASI தொடங்கியது

திருச்சியில் முதலாம் உலகப் போர் நினைவிடத்தில் சீரமைக்கும் பணியை ASI தொடங்கியது

திருச்சி லால்குடி நெடுஞ்சாலையில் வாளாடி அருகே பழுதடைந்து நூற்றாண்டு பழமை வாய்ந்த முதலாம் உலகப் போர் நினைவிடத்தில் இந்திய தொல்லியல் துறை மறுசீரமைப்பு பணிகள் துவங்கியுள்ளன.

முதல் உலகப் போரில் வெற்றிபெற்றதன் அடையாளமாகவும், அதில் இந்திய வீரர்கள் முக்கிய பங்காற்றியதை நினைவுகூரும் வகையிலும் திருச்சி மாவட்டம், லால்குடி சாலையில் வாதாடி அருகே உள்ள பச்சாம்பேட்டையில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. இதனை திவான்பகதூர் கிருஷ்ணமாச்சாரியார் கட்டினார். அதன்பிறகு 1922ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி திவான்பகதூர் தேசிகாச்சாரியார் இதனைத் திறந்து வைத்தார்.

கம்பீரமாக காட்சியளித்த இந்த நினைவுச்சின்னம் நூற்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், பராமரிப்பு இல்லாததால் சிதிலமடைந்துவருகிறது. இதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று இந்திய தொழில்துறைக்குத் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சிவா கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து நினைவுச்சின்னம் வளைவை ஆய்வுசெய்து சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய தொல்லியல்துறையின் திருச்சி மண்டல அலுவலகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன்பேரில் அதிகாரிகள் பச்சாம்பேட்டைக்கு வந்து நினைவுச்சின்ன வளைவை ஆய்வுசெய்தனர். மேலும், அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, வலுவிழந்து காணப்படும் தூண்களை சிமெண்ட் கட்டுமானம் கொண்டு சீரமைப்பது, வளைவுக்கு வண்ணங்கள் பூசி மீண்டும் பொலிவூட்டுவது குறித்து ஆய்வுசெய்தனர். அதுமட்டுமின்ரி பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைப்பது எனவும் திட்டமிடப்பட்டது.

முதல் உலகப் போர் நினைவுச் சின்னமான வளைவை சீரமைக்கும் திட்ட மதிப்பீட்டில் 6.73 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்திய தொழில்துறை உத்தரவிட்டுள்ளது.

 விரைவில் இதற்கான பணிகள் துவங்கி நினைவுச்சின்ன வளைவை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்

அதற்கான மறுசீரமைப்பு பணிகளை தற்போதுASI தொடங்கியுள்ளது.உலகப் போர் நினைவுச் சின்னத்தை சுற்றுலா சுற்று பாதையாக இணைக்க ASI முன்மொழிந்து உள்ளது.

 2020 அக்டோபரில் ASI திருச்சி வட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இப்பகுதியில் பாதுகாப்பாற்ற நினைவுச் சின்னங்களில் மறுசீரமைப்பு திட்டங்களில் பச்சம் பேட்டை வளைவு மறுசீரமைப்பு முதன்மையானது என்று மறுசீரமைப்பு பணிகளை மேற்பார்வையிடும் கலாச்சார அமைச்சகத்தின் இயக்குனர் டாக்டர் அருண்ராஜ் கூறினார்.

 நாங்கள் தகவல் பலகைகளை காட்சிப்படுத்துவோம் மற்றும் ஆக்கிரமிப்புகளை தடுக்க நினைவிடம் அருகே தோட்டம் உருவாக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn