திருச்சி நீதிமன்றம் முன்பு மாநகராட்சி பூங்காவில் சந்தன மரத்தை வெட்டிய நபர் கைது

திருச்சி நீதிமன்றம் முன்பு மாநகராட்சி பூங்காவில் சந்தன மரத்தை வெட்டிய நபர் கைது

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பூங்கா திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரே உள்ளது. பரங்கிரி வேலுப்பிள்ளை என்ற பெயரில் உள்ள இந்த பூங்காவில் பொதுமக்கள் நடைபயிற்சி செல்வதற்கும், குழந்தைகள் விளையாடுவதற்கும் ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுச்சூழலை காக்கும் வகையில் அங்கு அதிகளவு மரங்கள் நடப்பட்டுள்ளன.

இதில் அரசமரம், புங்கை மரம், வேப்ப மரம் ஆகியவற்றுடன் சந்தன மரமும் வனத்துறை அனுமதி பெற்று வளர்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்தப் பூங்காவின் காவலாளி வழக்கம்போல் காலையில் பூங்காவை சுத்தம் செய்து வந்த போது மரம் வெட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு வந்த உதவி ஆய்வாளர் மோகன் விசாரணை நடத்தி அங்கு உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு வெட்டிய நபரை பிடித்து உள்ளார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் தஞ்சாவூரைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. சந்தன மரம் வெட்டிய நபர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn