தமிழகத்தில் 5 கோடிக்கு மேற்பட்டோர்க்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - திருச்சியில் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி

தமிழகத்தில் 5 கோடிக்கு மேற்பட்டோர்க்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - திருச்சியில் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி

ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் 5வது மாபெரும் தடுப்பூசி முகாமை பார்வையிட்ட பின்னர் விமானம் மூலம் சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

முன்னதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறுகையில்... இன்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 22 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. 11.50 லட்சம் முதல் தவணை செலுத்தி தடுப்பு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 11 லட்சம் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. அரசு சார்பில் இதுவரை 5 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம்  தடுப்பூசிகளின் 
செலுத்தப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனை மூலமாக இதுவரை 25,50,537 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து தடுப்பு ஊசி செலுத்தப்படும் பணிகளை தமிழக முதல்வர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திருவிழா காலங்களில் பொதுமக்கள் கூடுவதே கண்காணிக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள் பொதுமக்கள் உரிய விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

நீட் தேர்வு கூடாது என்று தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு சுமார் 48 ஆயிரம் மேற்பட்டோரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு அதனடிப்படையில் அறிக்கையை பெற்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் 12 மாநில முதல்வருக்கு கடிதம் எழுதி இதில் இணைய கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையை ஏழு மொழிகளில் மொழி பெயர்த்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn