நீடித்த நிலையான கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி.

நீடித்த நிலையான கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் கரும்பு விவசாயிகள் குழுவிற்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது. 

இதில் வேளாண்மை உதவி இயக்குநர் சுகுமார் பேசுகையில்...... வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் நெல் விதை சம்பா பருவம் விநியோகம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், மண்வளம் அட்டை திட்டம் மானிய திட்டங்கள் பற்றி விரிவாக விளக்கி கூறினார். 

கோத்தாரி சர்க்கரை ஆலை இருந்து உதவி கரும்பு மேலாளர் முருகேசன் பேசுகையில்..... நீடித்த நிலையான கரும்பு சாகுபடி முறையானது கரும்பு நடவில் கரணைகளுக்கு பதிலாக கரும்பு விதைப் பருக்களை குழி தட்டுகளில் தேங்காய் நார் கழிவுடன் சேர்த்து நிரப்பி நிழல் வலையில் நாற்றங்கால் அமைத்து வளர்ந்த நாற்றுகளை கொண்டு கரும்பு நடவு செய்யும் முறையாகும் சாதாரண முறையில். ஏக்கருக்கு 3 முதல் 4 டன் அளவிலான கரும்புகளை உபயோகிக்க வேண்டும்.

ஆனால் இம்முறையில் ஏக்கருக்கு 6000 நாற்றுகள் மட்டுமே போதும் முளைப்புத்திறனையும் பயிர் எண்ணிக்கையும் அதிகப்படுத்தலாம் எளிதாக எடுத்துச் செல்லலாம், தண்ணீர் மற்றும் உறக்கத்தின் உபயோகிப்புத்திறன் கூடுகிறது. தூர்களின் எண்ணிக்கை கரணை நடவு முறை விட அதிகம், ஊடு பயிர் செய்யப்படுவதன் மூலம் கூடுதல் வருமானம் , காற்று மற்றும் சூரிய ஒளி சீராக கிடைப்பதால் கூடுதலாக உருவாகும் கரும்புகள் அனைத்தும் நீளமான நிமிர்ந்த அதிக எடை கொண்ட கரும்புகளாக கிடைக்கும். 

ஒரு மாத கால வயதுடைய நாற்றுகளை நடவு செய்வதன் மூலம் பயிர்சாகுபடி காலம் குறைவு, நான்கரை அடி பார் இடைவெளி என்பதால் குறைந்த செலவில் இயந்திரம் கொண்டு மண் அணைத்தல் மற்றும் கரும்பு அறுவடை செய்யலாம் மேற்கண்ட முறைகளில் பாசனம் அமைத்து கரும்பு சாகுபடி செய்வதால் நீர் பாசனம் அளவு குறைத்து நீர் சேமிக்கப்படுகிறது. உதவி வேளாண்மை அலுவலர் எடிசன் பேசுகையில்..... வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் பற்றி விரிவாக விளக்கி கூறினார். 

பயிற்சியில் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சபரிச்செல்வன் பேசுகையில்.... அட்மா திட்ட செயல்பாடுகள், கண்டுணர்வு சுற்றுலா விவசாயிகள் பயிற்சி, செயல் விளக்கங்கள் பற்றி விளக்கி கூறினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் கார்த்திக் பேசுகையில் உழவன் செயலி பற்றி விளக்கி கூறி விவசாயிகளுக்கு பதிவிறக்கம் செய்து கொடுத்தார். பயிற்சிக்கான ஏற்பாட்டினை நெப்போலியன் கரும்பு இன்ஸ்பெக்டர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ராஜரெத்தினம் ஆகியோர் செய்திருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision