திருச்சியில் அரசு பொருட்காட்சி - அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்து பார்வையிட்டார்

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் திருச்சி அண்ணா விளையாட்டரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அரசுப்பொருட்காட்சியினை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு தொடங்கி வைத்து, பல்வேறு அரசு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொற்கால ஆட்சியில் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள், சாதனைகள். செயல்பாடுகளை அனைத்து தரப்பு மக்களும் அறிந்து பயன்பெறும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அரசுப்பொருட்காட்சி பல்வேறு மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.
அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் இன்று தொடங்கப்பட்டுள்ள அரசுப்பொருட்காட்சியில், செய்தி மக்கள் தொடர்புத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சுற்றுலாத்துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, காவல்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த் துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை
தோட்டக்கலைத் துறை, பொதுப்பணித் துறை, இந்து சமய அறநிலையத் துறை, பள்ளிக்கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கைத்தறி மற்றும் கிராமத் தொழில் துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சுற்றுச்சூழல் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, பிற்பட்டோர்,
மிகப்பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மீன் வளர்ச்சித்துறை துறை ஆகிய 27 அரசுத்துறை அரங்குகளும், மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், திருச்சி மாநகராட்சி. ஆவின். மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மகளிர் மேம்பாட்டுக் கழகம் உள்ளிட்ட 5 அரசு சார்பு நிறுவனங்கள் என மொத்தம் 32 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொற்கால ஆட்சியில் ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் எண்ணிலடங்கா திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மகளிருக்கு இலவச பேருந்து பயணத்திட்டம், அரசுப்பள்ளியில் பயின்று கல்லுாரிக்குச் செல்லும் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண்திட்டம், தமிழ்புதல்வன் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, கலைஞர் கனவு இல்லத்திட்டம், மாணவ மாணவிகளுக்கு காலை உணவுத்திட்டம் என எண்ணிலடங்கா திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது.
அத்தகைய திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் ஒவ்வொரு துறையின் சார்பிலும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்குகளில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அவர்களின் துறை சார்ந்த திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.மேலும், குழந்தைகளை கவரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள், விளையாட்டு சாதனங்கள், தினந்தோறும் கலை நிகழ்ச்சிகள், மாணவ, மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகள் இந்த அரசுப் பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ளது.
இன்று தொடங்கி தொடர்ந்து 45 நாட்களுக்கு இந்த பொருட்காட்சி நடைபெறவுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் குடும்பத்தோடு வருகை தந்து பொருட்காட்சியினை கண்டுகளிக்க வேண்டும்.அரசுப் பொருட்காட்சி நுழைவுக்கட்ணமாக பெரியவர்களுக்கு 15 ரூபாயும் சிறியவர்களுக்கு 10 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசுப்பொருட்காட்சி தினந்தோறும் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிவரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார். மாநகர காவல் ஆணையர் காமினி. மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன்,மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி,நகரப் பொறியாளர் சிவபாதம், உள்ளிட்ட அரசுத்துறை உயர் அலுவலர்கள், மண்டலத்தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision