கத்தியை காண்பித்து ரூ.30,000/- பணத்தை கொள்ளையடித்த ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

கத்தியை காண்பித்து ரூ.30,000/- பணத்தை கொள்ளையடித்த ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா, திருச்சி மாநகரத்தில் காவல் ஆணையாளராக பொறுப்பேற்றது முதல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

கடந்த (06.05.2023)-ம் தேதி, ஸ்ரீரங்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட Y ரோடு அருகில் செங்கல் லோடுமேன் ஒருவரிடம் மூன்று நபர்கள் பட்டா கத்தியை காண்பித்து பணம் ரூ.30,000/-, 4 பவுன் தங்க மோதிரம் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் திருவானைக்கோவிலை சேர்ந்த 1)ரெங்கநாதன் (23) த.பெ.முத்துகுமார், 2)சித்திக் (20) த.பெ.சுல்தான், 3)முகேஷ் (21) த.பெ.ராஜா ஆகியோர்கள் இக்குற்ற சம்பவத்தில் ஈடுப்பட்டது தெரியவந்து, மூவரையும் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர்களில் எதிரி ரெங்கநாதன் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வரும் ரவுடி என்பதும், அவன் மீது ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 17 வயது மைனர் பெண்ணை காதலித்து ஏமாற்றி பாலியில் வன்கொடுமை செய்ததாக 1 வழக்கும், ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் 2 அடிதடி வழக்குகளும், திருச்சி மாவட்டம் மணிகண்டம் காவல் நிலைய எல்லையில் மிளகாய் பொடி தூவி வழிப்பறி செய்தது உட்பட 3 வழக்குகளும், மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் 1 அடிதடி வழக்கும், திருவெறும்பூர் காவல்நிலைய எல்லையில் செல்போன் பறித்து சென்றதாக ஒரு வழக்கும், சிறுகனூர் காவல்நிலையத்தில் இருசக்கர வாகனம் திருடியதாக ஒரு வழக்கு உட்பட 9 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதும் தெரிய வருகிறது.

எனவே, எதிரி ரெங்கநாதன் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவர் எனவும், கத்தியை காட்டி பணத்தை பறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர் எனவும் விசாரணையில் தெரியவந்ததால், மேற்படி எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம், காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரி மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn