பேருந்து நிறுத்த நிழற்குடைக்கு தடுப்புகள் ஏற்படுத்தி பாதுகாப்பு - பயணிகள் அவதி நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி

பேருந்து நிறுத்த நிழற்குடைக்கு தடுப்புகள் ஏற்படுத்தி பாதுகாப்பு - பயணிகள் அவதி நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி

திருச்சி மாநகரில் உள்ள பேருந்து நிழற்குடைகள் பேருந்துகள் பயணிகளின் வசதிக்காக பல லட்சம் ரூபாய் செலவில் இருக்கைகள் மற்றும் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறாக உள்ள பேருந்து நிழற்குடைகள் ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் குடியிருப்பாக இருந்து வருகிறது. இது மட்டுமின்றி கால்நடைகளும் தஞ்சமடைந்தது தொடர்கதையாக இருக்கிறது. இந்த நிலையில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் பேருந்து நிழற்குடையில் நிற்காமல் சாலையில் நின்று பேருந்தில் ஏற கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி ஒத்தக்கடை பகுதியிலுள்ள பேருந்து நிழற்குடையை சுற்றிலும் சாக்கடை நீர் சூழ்ந்து பேருந்து நிழற்குடை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும் அங்கு துர்நாற்றம் வீசுவதால் அந்தப் பேருந்து நிறுத்தத்திற்கு வரும் பயணிகள் சாலையில் நின்று பேருந்தில் ஏற கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள இந்தப் பேருந்து நிழற்குடை உள்ளது.

கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக இந்த அவல நிலையில் உள்ள பேருந்து நிழற்குடையை முன்பு தடுப்புகளை வைத்து பாதுகாப்போடு வைத்திருப்பது போல் இருப்பது பேருந்து பயணிகள் மத்தியிலேயே வேதனை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் பேருந்து நிழற்குடை முன்பு உள்ள சாக்கடை நீரை அப்புறப்படுத்த வேண்டும், அங்கு கிருமிநாசினி தெளிக்க வேண்டும். மேலும் பேருந்து நிழற்குடையில் ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் தங்காதவாறு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேருந்து பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn