திருச்சி நீர்வளத்துறை செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் மூவர் மீதும் வழக்குப்பதிவு

திருச்சி நீர்வளத்துறை செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் மூவர் மீதும் வழக்குப்பதிவு

திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தில் நேற்று ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் .துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற சோதனையில் உதவி பொறியாளர் கந்தசாமியிடம் இருந்து 31 லட்சத்து 26 ஆயிரத்து 300 ரூபாய் கைப்பற்றப்பட்டது .இது தொடர்பாக விசாரணை நடந்ததில் கட்டளை மேட்டு வாய்க்கால் புதுப்பிக்கும் பணிக்காக ஒப்பந்தக்காரர்கள் கொடுத்த லஞ்சப்பணம் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் மணிமோகன் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அவர் வீட்டில் இருந்து 4 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டது. மேலும் இதற்கு உடனடியாக இருந்த உதவி செயற்பொறியாளர் ஜெயராமனிடம் விசாரணை நடைபெற்றது. தற்பொழுது திருச்சி ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவினர் 2 பிரிவுகளின் கீழ் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஊழல் தடுப்புச் சட்டம் 7 மற்றும் 7(A) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை நீர்வள ஆதாரத்துறை எடுக்கும் என ஊழல் தடுப்பு கண்காணிப்புதுறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கட்டளை மேட்டு வாய்க்காலில் புதுப்பிக்கும் பணி நடைபெறுகிறது.2019 ஆம் ஆண்டு இதற்காகரூ 335 கோடி ஒதுக்கி அரசாணை வெளியானது.அப்பணிகளுக்கு
 ஒப்பந்தக்காரர்கள் இந்த தொகை கொடுத்தார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO