"அருண் முருகையா மரணம் மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது, நான் சம்பந்தப்பட்ட எதுவும் அரசியலாக ஏற்படுத்துவது வாடிக்கை" - கார்த்திக் சிதம்பரம் பேட்டி!

"அருண் முருகையா மரணம் மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது, நான் சம்பந்தப்பட்ட எதுவும் அரசியலாக ஏற்படுத்துவது வாடிக்கை" - கார்த்திக் சிதம்பரம் பேட்டி!

திருச்சி விமான நிலையத்தில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அதில் காங்கிரஸ் சார்பில் 234 தொகுதிகளிலும் கள நிலவரம் குறித்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்ப வேண்டிய தொகுப்பு கையில் உள்ளது அதை வெளிப்படையாக தற்போது தெரிவிக்க முடியாது. திமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையின் போது காங்கிரஸ் பலம் குறித்து பேசுவதற்காக நாங்கள் சர்வே எடுத்து வைத்துள்ளோம். 

திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என்பது நாங்கள் தற்போது எடுத்த சர்வேயில் தெளிவாக தெரிகிறது. 

Advertisement

பேச்சுவார்த்தை தற்போது தொடங்கப்படாத நிலையில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ பட்டியலும் வெளியிடப்படவில்லை, கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும் பட்சத்தில் திமுக பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள். 

எத்தனை இடத்தில் நிற்போம் என்பது முக்கியமல்ல, தேர்தல் கூட்டணிக்கு எது சாதகமாக இருக்கும் என்பது மட்டுமே தற்போது கருத்தில் கொள்ளப்படும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஒன்றே தற்போது எங்களுடைய குறிக்கோள், எங்களுடைய கூட்டணி வெற்றி பெற வேண்டும்.

மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளி எந்த மாநிலத்தில் இயங்குகிறதோ அந்த மாநிலத்தின் மொழி கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும், இதுதொடர்பாக நானும் கடிதங்கள் எழுத தயாராக இருக்கிறேன்.

Advertisement

மருத்துவ படிப்பில் அறிவித்துள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக வரவேற்கிறேன், நீட்டுக்கு முன் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பெரிய அளவில் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை, 12 வருடத்தில் 74 பேருக்கு தான் இடம் கிடைத்துள்ளது. தனியார் பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டும்தான் நீட்டுக்கு முன்பும், பின்பும் இடம் கிடைத்தது, தற்போதுதான் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது, இட ஒதுக்கீடு என்பது அணைவரது கூட்டு முயற்சி, தமிழ் சமுதாயத்திற்கு சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி.

ஹைட்ரோ கார்பனை ஆழ்கடலில் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.இது போன்ற திட்டங்கள் செயல்படுத்த உள்ளூர் மக்களின் அனுமதியுடன் தான் நடத்த வேண்டும், தற்போது அனுமதி கொடுத்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது, இது போன்ற திட்டங்களை அரசே செயல்படுத்துவதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவோம்.இது மக்கள் போராட்டமாக மாறும். 

இந்தியாவினுடைய உள்துறை அமைச்சர் தமிழகம் வருவது பெரிய செய்தியே அல்ல, இது ஒரு வாடிக்கையானது.. டெல்லியில் மட்டும் இருக்காமல் எல்லாம் மாநிலத்திற்கும் அடிக்கடி செல்ல வேண்டும்.என் அப்பா எங்கள் வீட்டிற்கு வருவது போன்றது தான் அமித்ஷா தமிழகம் வருவது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை சட்ட ரீதியாக முடிவு வந்தால் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளோம், மற்றவர்களுக்கு கிடைக்காத சலுகை அவர்களுக்கு கொடுக்க கூடாது. சட்டரீதியாக நீதிமன்றத்தின் மூலம் அவர்களுக்கு விடுதலை என்கிற ஒரு தீர்ப்பு வந்தால் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறோம்.அவர்கள் போராளிகள் போல் சித்தரிக்க கூடாது.தமிழ்நாட்டில் அனைவரும் ராஜீவ் காந்தி கொலை என்று தான் சொல்கிறார்கள் ராஜீவ் காந்தியுடன் 16 பேர் இறந்துள்ளார்கள். டாக்டர். அருண் உயிரிழப்பு மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது, நான் சம்பந்தப்பட்ட எதுவும் அரசியல் ஏற்படுத்துவது வாடிக்கை, இது எனது துரதிர்ஷ்டம் என்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY