நீதிமன்றத்தில் அதிகார துஷ்பிரயோகம் - டிஐஜி வருண்குமாருக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் அறிவிப்பு
திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவி குழந்தைகளை அவதூறாக பேசி வலைத்தளங்களில் நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து பதிவிட்டதும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவதூறாக பேசியது தொடர்பாக டி.ஐ.ஜி வருண்குமார் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 4-ல் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதற்காக திருச்சி குற்றவியல் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வரும் டிஐஜி வருண்குமார் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக கூறி, வழக்கறிஞர்கள் திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி (PDJ) மற்றும் முதன்மை குற்றவியல் நடுவிருக்கும் (CJM), நீதித்துறை நடுவர் என் 1அவர்களுக்கும் (JM 1), மனுவை நேரடியாக அளித்துள்ளனர். மேலும் டி.ஐ.ஜி-யை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதில் வழக்கறிஞர்கள் அளித்த மனுவில்......
1. திருச்சி மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் (SP) இந்நாள் திருச்சி சரக காவல் துணைத் தலைவர் (DIG) வருண் குமார் என்பவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் என்பவர் மீது தனி அவதூறு புகார் (Private Deformation Case) ஒன்றினை தனிப்பட்ட முறையில் (Individual Capacity) மாண்புமிகு குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்: 1-ல் தாக்கல் செய்துள்ளார்.
2. இவ்வழக்கிற்காக DIG வருண் குமார் நேற்று 07.01.2025 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் நீதிமன்றத்திற்கு சாட்சியமளிப்பதற்காக வந்த பொழுது DIG என்ற Official Capacity-ல் நீதிமன்ற பிரதான வாயில் முதல் குற்றவியல் நீதிமன்றம் வரை 100-ற்கும் மேற்பட்ட காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.
3. இதனால் வழக்கறிஞர்களை நீதிமன்றத்திற்குள் அனுமதிப்பதும், நீதிமன்ற வளாகத்திற்குள் ஒதுங்கி செல்ல வைப்பதுமாக அமளி துமளியாக்கி வழக்காடிகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் மிகுந்த சிரமத்தையும். கஷ்டத்தையும் ஏற்படுத்தினார்.
4. மேலும் அவர் வருகின்ற 21.01.2025 அன்று மீண்டும் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்திற்கு வருகை தரஉள்ளார். அந்த சமயமும் 100-ற்கும்மேற்பட்ட காவலர்களை நீதிமன்றத்திற்குள் நிருத்தி வழக்கறிஞர்களையம், வழக்காடிகளையும் அச்சுறுத்தவும் பயமுறுத்தவும் உள்ளார். இதனால் வழக்கறிஞர்களின் பணி பாதிக்கப்படுவதுடன் வழக்காடிகள் நீதிமன்றத்தில் ஆஜராவதில் பெரிய இன்னல்கள் ஏற்பட உள்ளது.
5. மேற்படி DIG வருண் குமார் Individual Capacity-ல் வழக்கு தாக்கல் செய்துவிட்டு நீதிமன்றத்திற்கு வரும்பொழுதெல்லாம் Official Capacity-ல் 100-ற்கும் மேற்பட்ட காவலர்களை நீதிமன்றத்திற்குள் நிறுத்துவது தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதோடு அல்லாமல் அவருடைய நேர்மையற்ற நடத்தைக்கு உதாரணமாகவும் உள்ளது.
6. மேலும் இவரை சுற்றி 30-ற்கும் மேற்பட்ட அதிரடி படை வீரர்களை குவித்து நீதிமன்றத்திற்குள் தனி ராஜாவாக தன்னைக் காட்டிக்கொள்கின்றார். தனிப்பட்ட முறையில் வழக்கு தாக்கல் செய்துவிட்டு அரசாங்க செலவில் காவலர்களை பணியமர்த்திக் கொள்வது கண்டிக்க தக்கது. மேலும் சாதாரண குடிமக்களின் வரிப்பணத்தில் இவருடைய தனிப்பட்ட வழக்கிற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
7. மேலும் இவர் தாக்கல் செய்துள்ள தனிப்பட்ட வழக்கிற்கு சாட்சியமளிக்க வரும்பொழுது இவர் தனது உயர் அதிகாரிகளிடம் விடுமுறை பெற்று வராமல் Official Capacity-ல் வந்து நீதிமன்றத்திற்கு சாட்சியமளித்து வருகின்றார் என்பது விசாரணைக்குட்பட்தாகும்.
8. மேற்படி DIG வருண் குமார் தனது முகாம் அலுவலகத்திற்குள் யாரையும் அனுமதிக்காமல் இருப்பதுடன், அவருடைய முகாம் வளாகத்திற்குள் பேட்டியோ, செல்போனோ வைத்திருக்க அனுமதிப்பதில்லை. ஆனால் அவர் நீதிமன்றத்திற்கு சாட்சியமளிக்க வரும்பொழுதெல்லாம் நீதிமன்றம் தனது சட்டை பாக்கெட்டில் உள்ளது போன்று நீதிமன்றத்திலேயே பேட்டி அளிப்பதும், செல்போனில் பேசுவதும் இவரது முகாம் அலுவலகத்திற்கு ஒரு நியாயம், நீதிமன்றத்திற்கு ஒரு நியாயம் என நடந்து கொள்வது பொதுமக்கள் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
9. குடிமைப் பணி அதிகாரிகளுக்கான (IPS Officers) உள்ள நடத்தை விதிமுறைகளையெல்லாம் மீறி தன்னை கடவுளாளல் அனுப்பி வைக்கப்பட்ட புனித பிறவி போல நீதிமன்றத்திற்குள் நடந்துகொள்வது சாமானிய பொதுமக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத அருவெறுக்கத்தக்க செயல்களை நீதிமன்றத்திற்குள் செய்து வருகிறார்.
10. (07.01.2025) அன்றைய நீதிமன்றத்திற்குள்ள வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்வதற்கு அதனை சாட்சியமாக பயன்படுத்த வேண்டியுள்ளதால் அதனை பாதுகாத்து வைக்க வேண்டுகிறோம்.
11. மாண்புமிகு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கமான வழக்காடிகள் காலை 10.30 மணிக்கு ஆஜராவதுபோல் இவரும் ஆஜராக வேண்டும். நீதிமன்றத்தில் அழைப்பு பணிகள் முடிந்தவுடன் after calling works வழக்காடிகளுக்கு வரிசை கிரமமாக வழக்குகளை ஒவ்வொன்றாக எடுத்து நடத்துவதுபோல் இவருடைய வழக்கினையும் மற்ற குடிமகன்களின் வழக்குபோல் நடத்த வேண்டும். அதுவரை இவர் நீதிமன்றத்திற்கு வெளியே நிற்க வேண்டும். இவருக்கென சிறப்ப சலுகைகள் வழங்கி நேரம் ஒதுக்கி அந்த நேரத்திற்கு அவரை வரவழைப்பது நீதித்துறையின் மீது மிகுந்த சந்தேகத்தையும், நம்பிக்கையின்மையையும் முடிகின்றது. இது நீதி வழங்கும் முறைக்கு எதிரானதாகும். பார்க்க
12. எதிர்வரும் 21.01.2025 அன்று மீண்டும் சாட்சியம் அளிக்க வருகின்ற திருச்சி சரக காவல்துணை தலைவர் வருண் குமார் நீதிமன்றத்திற்கு அதிகார துஷ்பிரயோகம் செய்து வழக்காடியாக இல்லாமல் அடாவடியாக நடந்துகொள்வதை கண்டித்து நீதிமன்றத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த உள்ளோம்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision