முட்டை மற்றும் டம்ளர்களில் அமர்ந்து யோகாசனம்

முட்டை மற்றும் டம்ளர்களில் அமர்ந்து யோகாசனம்

திருச்சி பெரிய செட்டி தெரு பகுதியில் உள்ள டைனி கிட்ஸ் பிளே ஸ்கூல் சார்பாக உலக சாதனை நிகழ்ச்சி திருச்சி தமிழ் சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் ஆசிரியை தேவகமலா வரவேற்புரை ஆற்றிட டைனி கிட்ஸ் பிளே பள்ளி தாளாளர் சித்ரா வினோத் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக திருச்சி தில்லைநகர் வெல்கேர் மருத்துவமனை மருத்துவர் ஆஷிகா கலந்து கொண்டு உலக சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் ஐந்து வயதுக்கு உட்பட்ட சிராதர்சன், வேதாரக்ஷனா, லாவண்யா, சமுத்ரா, ஸ்ரேயாஸ்ரீ மற்றும் சரண்யா ஸ்ரீ ஆகியோர் 32 முட்டைகள் கொண்ட தட்டில் 5 நிமிடம் வரை பத்மாசனம் நிலையில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.

இதே போல் ஐந்து வயதிற்கு மேற்பட்ட ஜஸ்வின், அப்ரஜித் மற்றும் ஹன்சிகா ஆகியோர் 5 நிமிடம் வரை மூன்று டம்ளர்களில் பத்மாசனம் மற்றும் அக்கர்னா தனுராசனம் நிலையில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு வெர்கஷா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் எடிட்டர் மற்றும் முதன்மை தீர்ப்பாளர் ரெங்கநாயகி உலக சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

அதனைத் தொடர்ந்து திருச்சி டைமிங் கிட்ஸ் ப்ளே பள்ளி சார்பாக பள்ளி மாணவ மாணவிகளின் யோகாசனம் நடனம் நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளை ஊக்குவித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision