திருச்சி ஶ்ரீரங்கம் பகுதி திமுக கூட்டத்தில் நாற்காலி வீச்சு - முன்னாள் துணை மேயர் முன்பு அடிதடி

திருச்சி ஶ்ரீரங்கம் பகுதி திமுக கூட்டத்தில் நாற்காலி வீச்சு - முன்னாள் துணை மேயர் முன்பு அடிதடி

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் இன்று (30.12.2021) திருச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா நடைபெறுகிறது. முதல்வரை வரவேற்க கட்சியின் முதன்மை செயலாளரும், நகர்புற அமைச்சர் நேருவுக்கு சொந்தமான தனியார் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கவும், அதிகமான கூட்டம் காண்பிக்க பகுதி செயலாளர்கள் மூலமாக வட்ட செயலாளர்களுக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக வட்டசெயலாளருக்கு செலவுக்கு ரூ.50 ஆயிரம் பணமும் மத்திய மாவட்டம் மூலம் வழங்கப்பட்டது.இதை பிரித்து கொடுக்கவும், முதல்வருக்கு வரவேற்பு அளிக்கவும் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் ராம்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் ஶ்ரீரங்கத்தில் நடைபெற்றது. இதில் வட்ட செயலாளர்களுக்கு பணம் பிரித்து கொடுப்பதில் தகராறு ஏற்பட்டது. அப்போது 2வது வட்ட செயலாளரான வெல்லமண்டி ராமன்  4-வது வட்ட செயலாளர் சிவகண்ணு வார்டுகளுக்கு பணம் தர மறுத்ததால் ராம்குமார் தரப்புக்கும் வட்ட செயலாளர்கள் ஜனா சிவக்கண்ணன் தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ராம்குமார் வெல்லமண்டி ராமனை அறைந்ததாக கூறப்படுகிறது. இதில் வட்ட செயலாளர்கள் சிவ கண்ணு ஜனா இருவரும் பகுதி செயலாளர் ராம்குமாரை நோக்கி ஆவேசமாக நெருங்க உடனே ராம்குமார் இருவரையும் நோக்கி இருவர் மீதும் நாற்காலிகளை வீசினார். இதனால் கூட்டம் நடந்த இடம் ஒரே கலவரமாக இருந்தது. கூட்டத்திற்கு வந்த நகர செயலாளரும், முன்னாள் துணை மேயர் அன்பழகன் இரு தரப்பையும் சமாதானப்படுத்த முயல இருதரப்பும் சமாதானம் அடையாமல் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். உடனே அன்பழகன் அங்கிருந்து இரு தரப்பையும் திட்டிவிட்டு வெளியேறினார் .

திமுக தலைவர் ஸ்டாலின் திருச்சி வரும் நிகழ்ச்சி முன்னிட்டு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர் முன்னாள் துணை மேயர் அன்பழகன் முன்பே பகுதி செயலாளர் வட்ட செயலாளர்கள் மோதிக்கொண்டது ஶ்ரீரங்கம் பகுதி திமுக வினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

சட்டசபை தேர்தலில் 25ஆண்டுகளுக்கு பிறகு ஶ்ரீரங்கம் தொகுதியை கைப்பற்றிய திமுக முதல்வர் வரவேற்பு நிகழ்சிக்காக தாக்கி கொண்டதும், வட்ட செயலாளர்கள் ஜனா சிவகண்ணு பகுதி செயலாளர் ராம்குமார் இடையே நடைபெறும் கோஷ்டி பூசலால் திமுக நிர்வாகிகள் பல அணிகளாக உருவாவது உள்ளாட்சி தேர்தலில் பாதகமான நிலைக்கு கொண்டு செல்லும் என ஸ்ரீரங்கம் தொகுதி உடன்பிறப்புகள் புலம்பி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn